முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!
Jana Nayagan OTT Release Update: தென்னிந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜன நாயகன். இதை இயக்குநர் எச்.வினோத் இயக்க, முதல்வர் விஜய் நயாகனாக நடித்திருந்தார். இப்படம் ஜூலை இறுதியில் திரையரங்குகளில் வெளியான நிலையில், ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக இருந்து, தற்போது தமிழக முதல்வராக பணியாற்றிவருபவர் விஜய் (CM Vijay). இவர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நாயகனாக நடித்துவந்த நிலையில், இறுதியாக இவர் நடித்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இதை இயக்குநர் எச்.வினோத் (H Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா (Venkat K Narayana) தயாரித்திருந்தார். இவர்களின் தயாரிப்பில் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்திலே வெளியாகவேண்டிய இப்படம், சென்சார் பிரச்சனையின் காரணமாக 6 மாதங்களுக்கு பின் திரையரங்குகளில் வெளியானது. இதற்கிடையே படம் முழுவதுமாக இணையத்தில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் உலகமெங்கும் திரையரங்குகளில் ஜன நாயகன் வெளியானது. இந்த படமானது தற்போதுவரையில் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், இதன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரமாகிவருகிறது.




இதையும் படிங்க: முதல்வர் விஜயை அப்படிதான் அழைத்தேன்.. சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விஷால்!
ஜன நாயகன் பட ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும்:
முதல்வர் விஜய் ஆக்ஷன் போலீஸ் அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் நடித்துள்ள திரைப்படம்தான் ஜன நாயகன். இதில் விஜய்யக்கு ஜோடியாக நடிகை நடிகை பூஜா ஹெக்டே நடிக்க, மகளாக நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இப்படம் முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான கதையில் வெளியானது.
இதையும் படிங்க: அந்த நடிகரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் – அஜித் குமார் ஓபன் டாக்!
அனிருத்தின் இசையில் இப்படத்தின் பாடல்கள் சிறப்பாகவே இருந்தது. இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 3 வாரத்திற்கும் மேல் ஆகும் நிலையில், ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகிவருகிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஜன நாயகன் திரைப்பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து வைரலாகும் பதிவு:
#ThalapathyVijay‘s Last Film #JanaNayagan is all set to stream on ZEE5 from August 21 🔥
Official Announcement Coming Soon… pic.twitter.com/E3dIieiGzI
— Movie Verse (@_MovieVerse) August 5, 2026
ஜன நாயகன் படமானது தற்போதுவரையிலும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. இப்படம் என்னதான் இணையத்தில் லீக் ஆகியிருந்தாலும், திரையரங்குகளில் இதுவரை மொத்தம் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் விரைவில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.