Vishal: முதல்வர் விஜயை அப்படிதான் அழைத்தேன்.. சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய விஷால்!
Vishal on Meeting CM Vijay: நடிகர் விஷால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் லீட் நாயகனாக படங்களில் நடித்துவருகிறார். இவர் தனது இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாக்கியுள்ள புது படம் மகுடம். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், முதல்வர் விஜயை சந்தித்த தருணம் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.
கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஷால் (Vishal). இவரை அவரின் ரசிகர்கள் “புரட்சி தளபதி” என்று பாசமாக அழைப்பது உண்டு. இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக பணியாற்றிவருகிறார். சுந்தர் சி (Sundar C) முதல் ஆதிக் ரவிச்சந்திரன் வரை பல்வேறு இயக்குநர்களுடன் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த வரிசையில் இவர் இயக்குநராக இயக்கியிருக்கும் புது படம்தான் மகுடம் (Magudam). இதில் விஷால் வெறும் இயக்குநராக மட்டுமல்லாமல் நாயகனாகவும் நடித்துள்ளார். மறைந்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும், ஜி.வி. பிரகாஷ் இசையிலும் இந்த படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஞ்சலி (Anjali) மற்றும் துஷாரா விஜயனும் (Dushara Vijayan) இணைந்து நடித்துள்ளார்கள்.
இப்படம் விரைவில் வெளியாகும் நிலையில், இதன் விளம்பர பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது. அண்மையில் இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில், பேசிய விஷால் முதலமைச்சர் விஜயை (CM Vijay) நேரில் சந்தித்த தருணம் குறித்து பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: விஷாலின் மகுடம் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!
தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்தது குறித்து விஷால் பகிர்ந்த விஷயம்:
அந்த பேட்டியில் விஷால், “நான் முதல்வர் விஜயை சந்தித்தபோது, ஒரு முதலமைச்சரைச் சந்திக்கிறேன் என்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. நான் இதற்கு முந்தைய எல்லா முதலமைச்சர்களையும் சந்தித்திருக்கிறேன். நான் அவரை “டார்லிங்” என்றுதான் அழைத்தேன். “மார்க் ஆண்டனி டீசர் வெளியீட்டின்போது இதே இடத்தில் உங்களிடம் ஒரு கதை சொல்வதற்காக நான் ஒரு தேதியைக் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா ?” என்று அவரிடம் கேட்டேன். அதற்க்கு அவர் புன்னகைத்தார். பிறகு நான், “நீங்கள் இப்போது சினிமாவில் இல்லை, அதனால் நான் உங்களுக்காக என்ன எழுதினேனோ, அதை நானே செய்துவிடுவேன்” என்று சொன்னேன். அவர் இரட்டை வரி விதிப்புப் பிரச்சினையில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்.
இதையும் படிங்க: சிலம்பரசன் – அஸ்வத் மாரிமுத்துவின் STR51 பட நிலை என்ன? – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்!
பலர் எனது கூற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு, ராஜ்மோகன் இதற்குத் தகுதியற்றவர் அல்லது பயனற்றவர் என்று நான் சொன்னதாக நினைத்துக்கொண்டனர். ராஜ்மோகன் சாருக்கு உரிய மரியாதையுடன் கூறுகிறேன், விஜய் சார் 32 ஆண்டுகளாகத் திரையுலகில் இருக்கிறார். அவருக்கு இதைப்பற்றி அதிகம் தெரியும். நான் சொல்ல வந்தது என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் ராஜ்மோகன் சாரை விட அவர் அதிகத் தகுதி வாய்ந்தவர் என்பதுதான். நான் இதை விஜயிடம் நேரடியாகவே சொன்னேன்” என அதில் தெளிவாக பேசியிருந்தார்.
முதலமைச்சர் விஜயை சந்தித்தது தொடர்பாக விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Wishing our Hon CM Vijay, (@CMOTamilnadu) a very happy birthday. Completely different birthday and celebrations from all these years. This time the wishes will be flowing from all quarters of the World as always wishing U good health, peace and prosperity and also wishing U the… pic.twitter.com/6SjX4OWrQC
— Vishal (@VishalKOfficial) June 22, 2026
விஷாலின் மகுடம் திரைப்படம் வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இப்படத்தின் மீதான அதிக வரவேற்புகள் இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.