AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவாகரத்து செய்கிறாரா கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி? அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Kayal Chaitra Reddy Divorce Rumors: தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி சீரியலில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சைத்ரா ரெட்டி. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கயல் என்ற சீரியலில் முன்னணி நட்சத்திரமாக நடித்துவருகிறார். இவர் தனது கணவரை விவாகரத்து செய்வதாக சமீபகாலமாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

விவாகரத்து செய்கிறாரா கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி? அப்படி என்ன செய்தார் தெரியுமா?
சைத்ரா ரெட்டி மற்றும் ராகேஷ் Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 06 Aug 2026 21:07 PM IST

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் சீரியல்கள் சிறப்பாக வெளியாகிவருகிறது. அதில் சன் டிவியில் (Sun Tv) பிரபலமாகி ஒளிபரப்பாகிவரும் சீரியல்தான் கயல் (Kayal). இந்த சீரியல் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் சன் டிவியில் பிரபல தொடராக இருந்துவரும் நிலையில், இதில் நாயகியாக நடித்துவருபவர்தான் சைத்ரா ரெட்டி (Chaitra Reddy). இவர் ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil) ஒளிபரப்பாகிவந்த யாரடி நீ மோகினி (Yaaradi Nee Mohini) என்ற சீரியலில் வில்லனாக நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு பின் இவர் கதாநாயகியாக சன் டிவியில் நடித்துவந்த சீரியல்தான் கயல்.

இதில் இவருடன் சஞ்சீவ் நாயகனாக நடித்துவருகிறார். சீரியல் மற்றும் நடிப்பு வாழ்க்கையில் சிறந்தவராக இருக்கும் சைத்ரா, தற்போது தனது கணவர் ராகேஷ் சமலாவை விவாகரத்து செய்யவுள்ளதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது.

இதையும் படிங்க: ப்ரோ கோட் படத்தின் டைட்டிலை இப்படி மாற்றிவிட்டோம் – ரவி மோகன் ஓபன் டாக்

தனது கணவர் ராகேஷை விவாகரத்து செய்கிறாரா சைத்ரா ரெட்டி:

நடிகை சைத்ரா ரெட்டி, யாரடி நீ மோகினி என்ற சீரியலுக்கு பின் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவருக்கு கடந்த 2020ம் ஆண்டில், ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான ராகேஷ் சமலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், தற்போது இவர்கள் விவகாரத்து செய்வதாக தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: நயன்தாரா – கவினின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? – காரணம் இதுவா?

இது ஏனென்றால், நடிகை சைத்ரா ரெட்டி, தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த கணவர் ராகேஷின் புகைப்படங்களை டெலிட் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது. இது குறித்து இன்னும் இரு தரப்பினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சைத்ரா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:

நடிகை சைத்ரா ரெட்டி கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு முதலே சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2022ம்ஆண்டில் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான வலிமை படத்திலும் முக்கிய வேடத்தில் நடுத்தர. தற்போது இவர் சீரியல்களை கடந்து வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் விவகாரத்து செய்வதாக வட்டாரங்களில் கூறப்படும் நிலையில், அதற்கு விரைவில் விளக்கம் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us