மீண்டும் சீரியலியல் களமிறங்கும் கேப்ரியெல்லா.. அட அந்த ஹீரோவுக்கு ஜோடியாகவா?
Sundari serial Fame Gabriella Sellus new serial: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் கேப்ரியெல்லா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவந்த சுந்தரி என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியல் ஏற்கனவே நிறைவடிந்துவிட்ட நிலையில், தற்போது புது சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
சின்னத்திரை தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதுதான் சன் டிவி (Sun TV). இந்த தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல்கள் பல ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ் சின்னத்திரையில் அதிகம் டிஆர்பி (TRP Rating) கொண்ட சீரியலாக சன் தொலைக்காட்சி இருந்துவரும் நிலையில், ஏற்கனவே பல சீரியல்கள் ஒளிபரப்பாகிவருகிறது. மேலும் தற்போது புது சீரியல்களை ஒளிபரப்பாக தொடங்கவுள்ளதாம். சன் டிவியில் கிட்டத்தட்ட 4 மற்றும் 3 வருடங்களுக்கும் மேல் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் நிறைவுக்கு வருவதாக பேசப்பட்டுவரும் நிலையில், புது சீரியல்கள் வருகிறதாம்.
நடிகை கேப்ரியெல்லா (Gabriella sellus ) தற்போது புது சீரியல் ஒன்றில் நாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் சன் டிவியில் ஏற்கனவே சுந்தரி (Sundari Serial) என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலமானார். பின், தான் கர்ப்பமான நிலையில், சீரியலில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்கவுள்ளாராம்.




இதையும் படிங்க: கேமியோ பண்றதே நிப்பாட்டிட்டேன்… ஜெயிலர் 2ல் நடிக்க காரணம் இதுதான் – விஜய் சேதுபதி பேச்சு!
சின்னத்திரை சீரியலில் மீண்டும் களமிறங்கும் கேப்ரியெல்லா:
இவர் சுந்தரி என்ற நாடகத்தின் மூலம் தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பின் தற்போது புதிதாக ஒரு சீரியலில் நடிக்கிறாராம். இந்த புது சீரியலை மீடியாமொகுல் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம். இந்த சீரியலில் கேப்ரியெல்லாவுக்கு ஜோடியாக ஆர்.டி.ஷியாம் நடிக்கிறாராம்.
இதையும் படிங்க: அமெரிக்கன் படத்தை ரீமேக் செய்கிறாரா இயக்குநர் மணிரத்னம்? இணையத்தில் வைரலாகும் தகவல்
இவர் ஜீ தமிழில் வெளியாகிவந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நடித்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் ஜோடியாக புது சீரியலில் நடிக்கவுள்ளார்களாம். இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. ஆனால் இன்னும் எந்த தொலைக்காட்சியில் வெளியாகும் என எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்ரியெல்லா மற்றும் ஷியாம் நடிக்கவுள்ள புது சீரியல் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
View this post on Instagram
டிவி சீரியலின் ஷஆர்பி ரேட்டிங் போட்டியானது சன் டிவி மற்றும் விஜய் டிவி என இந்த இரு தொலைக்காட்சிகளுக்கு இருக்கிறது. இந்த இரு தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து புது புது சீரியல்களுக்கும் ஒளிபரப்பாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் கேப்ரியெல்லா நடிக்கும் புது சீரியல் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகிறார்கள். ஷியாம் மற்றும் கேப்ரியெல்லா நடிக்கவுள்ள புது சீரியல் சன் டிவி, விஜய் தீவில் அல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் என எந்த தொலைக்காட்சியில் வெளியாகும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.