நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் இதோ
Toxic Movie Trailer Release Update | பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகம் ஏற்படுத்தியுள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
கன்னட சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நாயகனாக வலம் வருகிறார் நடிகர் யாஷ். இவரது நடிப்பில் கன்னட மொழிகளில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் யாஷ் நடிப்பில் முன்னதாக வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களைத் தொடர்ந்தே நடிகர் யாஷ் பான் இந்திய நாயகனாக மாறினார். மேலும் உலக அளவில் இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் யாஷ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்து உள்ள படம் டாக்ஸிக். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் யாஷ் ராமாயணா படத்தில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமனாகவும் நடிகை சாய் பல்லவி சீதா கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.




நடிகர் யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா?
இந்த நிலையில் நடிகர் யாஷ் நாயகனாக நடித்து உள்ள டாக்ஸிக் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கே இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Preity Mukhundhan: பிரீத்தி முகுந்தன் பர்த்டே.. இதயம் முரளி பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
டாக்ஸிக் படக்குழு வெளியிட்டு எக்ஸ் தள பதிவு:
The countdown has begun…#ToxicTrailer on 08-08-2026.#Toxic: A Fairy Tale for Grown-Ups In Cinemas Worldwide from 26-08-2026. #ToxicTheMovie#ToxicOn26thAug@TheNameIsYash #Nayanthara @advani_kiara #TaraSutaria @rukminitweets @humasqureshi @GeetuMohandas @TheKVNofficial… pic.twitter.com/B8PQy9ttgD
— KVN Productions (@KvnProductions) August 1, 2026
Also Read… வெற்றிகரமாக 2வது வாரத்தில்.. புது போஸ்டரை பகிர்ந்த ஜன நாயகன் படக்குழு!