AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Preity Mukhundhan: பிரீத்தி முகுந்தன் பர்த்டே.. இதயம் முரளி பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!

Preity Mukhundhan Birthday: தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகையாக பிரபலமாகிவருபவர் பிரீத்தி முகுந்தன். இவர் இன்று (30/07/2026) தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், அவரின் பிறந்தநாளை ஸ்பெஷலாக இதயம் முரளி BTS வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

Preity Mukhundhan: பிரீத்தி முகுந்தன் பர்த்டே.. இதயம் முரளி பட BTS வீடியோவை பகிர்ந்த படக்குழு!
பிரீத்தி முகுந்தன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 30 Jul 2026 15:15 PM IST

கோலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக பிரபலமாகிவருபவர் பிரீத்தி முகுந்தன் (Preity Mukhundhan). இவர் கடந்த 2024ம் ஆண்டில் இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் (Sai Abhyankkar) இசையில் வெளியான “ஆச கூட” (Aasa Kooda) இண்டீ பாடலின் மூலம் பிரபலமானார். இந்த பாடலுக்கு பின் படங்களில் சிறு சிறு மற்றும் செகண்ட் ஹீரோயின் போன்ற வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் இவர் தமிழில் பிளாஸ்ட் (Blast) என்ற படத்தின் மூலம் அதிரடி ஆக்ஷன் நாயகியாக பிரபலமானார். கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் அதர்வாவுக்கு (Atharvaa) ஜோடியாக இறுதியாக இதயம் முரளி (Idhayam Murali) என்ற படத்தில் நடித்திருந்தார்.

கடந்த 2026ம் ஆண்டு ஜூலை 10ம் தேதியில் வெளியாகியிருந்த இந்த திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று 2026 ஆண்டு ஜூலை 30ம் தேதியில் தனது 24வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டதை வருகிறார். அந்த வகையில், இதயம் முரளி படக்குழு, பிரீத்தி முகுந்தனின் ஷூட்டிங் BTS வீடியோவை பகிர்ந்துள்ளது.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

நடிகை பிரீத்தி முகுந்தன் பிறந்தநாளை முன்னிட்டு இதயம் முரளி படக்குழு வெளியிட்ட BTS வீடியோ பதிவு:

நடிகை பிரீத்தி முகுந்தன் நடிக்கும் புது படங்கள் :

நடிகை பிரீத்தி முகுந்தன் என்னதான் தமிழ் நடிகையாக இருந்தாலும், தெலுங்கு சினிமாவின் மூலமாகவே கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். இறுதியாக இவரின் நடிப்பில் இதயம் முரளி படம் வெளியானது. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்க, பிரீத்தி முகுந்தன் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். இப்படமு அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு தெலுங்கில் எமோ எமோ லடி, தமிழில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தஷமக்கான் மற்றும் பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக நாகசில்ல என்ற படத்திலும் நடித்துவருகிறார்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

அந்த வரிசையில் இவர் தனுஷிற்கு ஜோடியாகவும் புது படத்தில் நடிக்கவுள்ளாராம். இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தனுஷ் D56 என்ற படத்தில் நடிக்கவுள்ள நிலையில், அதில் பிரீத்தி முகுந்தன் ஹீரோயினாக நடிக்கவுள்ளாராம். இந்த வேடத்திற்கு முதலில் ருக்மிணி வசந்தத்தை நடிக்க வைக்கவிருந்ததாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us