AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

Director Venky Atluri talks about Lucky Baskhar 2 movie | தெலுங்கு சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் அப்டேட் கொடுத்து உள்ளார்.

லக்கி பாஸ்கர் 2 படம் வருமா? வராதா? இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்
லக்கி பாஸ்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2026 12:30 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லக்கி பாஸ்கர். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கிய இந்த லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை மீனாட்சி சௌத்ரி நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் ஒரு வங்கியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். தொடர்ந்து புரமோஷன் கிடைத்து சம்பள உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் அவருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்தின் வளர்ச்சிக்காக என்ன எல்லாம் செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் இரண்டாம் குறித்த அப்டேட்டை இயக்குநர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

லக்கி பாஸ்கர் 2 படம் குறித்து வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்:

லக்கி பாஸ்கர் 2 (Lucky Baskhar 2) திரைப்படம் நிச்சயம் உருவாகும் என்பதை இயக்குனர் வெங்கி அட்லூரி உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், ரசிகர்கள் இதற்காக இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். இப்படத்தின் இரண்டாம் பாகப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னதாக, தான் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட இரண்டு பணிகளை முடிக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், லக்கி பாஸ்கர் 2 திரைப்படம் பெரும் பொறுப்பைக் கொண்டிருப்பதால், அப்பணியை அவசர அவசரமாக மேற்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை இப்படம் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பணிகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெங்கி அட்லூரி கூறினார்.

Also Read… ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ரிலீஸ் ட்ரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்தது டிசி படக்குழு… எப்போது தெரியுமா?

Follow Us