Dulquer Salmaan: மிட்டாய் மழை.. துல்கர் சல்மானின் ‘ஆகாஷம்லோ ஒக தாரா’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!
Mittai Mazhai Lyrical Video: தெலுங்கு சினிமாவில் துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகிவரும் சிறப்பான திரைப்படம்தான் ஆகாஷம்லோ ஒக தாரா. இதை இயக்குநர் பவன் சடினேனி இயக்கக, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இன்று (28/07/2026) துல்கர் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இப்படத்திலிருந்து மிட்டாய் மழை என்ற பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் பவன் சடினேனி (Pavan Sadineni) இயக்கத்தில், துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடித்துவந்த திரைப்படம்தான் ஆகாஷம்லோ ஒக தாரா (AakasamLo Oka Tara). இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை சாத்விகா வீரவல்லி (Satvika Veeravalli) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் (Shruti Haasan)மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங்கானது கடந்த 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றிருந்தது. இந்த படமானது ரயிலில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இதை இயக்குநர் பவன் இயக்க, கீதா ஆர்ட்ஸ் மற்றும் துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படம் காதல் மற்றும் குடும்பம் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இன்று 2026ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியில், துல்கர் சல்மான் தனது 39வது வயது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரின் ஆகாஷம்லோ ஒக தாரா படத்திலிருந்து “மிட்டாய் மழை” (Mittai Mazhai) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: ஒம் படத்தின் ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லை… உறுதி செய்த படக்குழு!
துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஆகாஷம்லோ ஒக தாரா படக்குழு வெளியிட்ட முதல் பாடல்:
Every great journey begins with one small step… ❤️
And here’s ours 🫶🏻#AOTFirstSingle is all yours!
▶️ https://t.co/LAzYq2qqSz#ChittiChittiCheema #KuttiKuttiPoove #MittaiMazhai #SanSanHawaPe
A @gvprakash Musical 🎧 #AakasamLoOkaTara #AOTMovie@dulQuer @pavansadineni… pic.twitter.com/gdctGy4IsM
— Geetha Arts (@GeethaArts) July 28, 2026
இந்த ஆகாஷம்லோ ஒக தாரா படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து மிட்டாய் மழை என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் பாடல்கள் பகிரப்பட்டுள்ளது என்பது குறிபிடகக்கத்து.
துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியான அப்டேட்டுகள்:
இன்று (28/07/2026) துல்கர் சல்மான் தனது பிறந்தநாளை கொண்டடைவரும் நிலையில், அவர் நடித்துவரும் ஸ்ரீ ஸ்ரீ படத்தின் முதல் பாடல் நேற்று (27/07/2026) வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து தற்போது ஆகாஷம்லோ ஒக்க தாரா படத்தின் முதல் பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ ஸ்ரீ மற்றும் ஆகாஷம்லோ ஒக தாரா என இரு படங்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!
இந்த அப்டேட்டுகளுடன் மேலும், மலையாளத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் துல்கரின் நடிப்பில் வெளியாகவுள்ள ஐஅம் கேம் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஆக மொத்தத்தில் இந்த் முறை துல்கர் சல்மானின் பிறந்தநாளில் மொத்தம் மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.