AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sri Sri: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!

Vaane Vaane Song: மலையாளம் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் துல்கர் சல்மான். இவர் இன்று 2026ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியில் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அவர் நடிக்கும் ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வானே வானே என்ற தமிழ் பாடலை படக்குழு பகிர்ந்துள்ளது.

Sri Sri: துல்கர் சல்மான் பர்த்டே.. ஸ்ரீ ஸ்ரீ படத்திலிருந்து வெளியான ‘வானே வானே’ பாடல்!
வானே வானே பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 Jul 2026 15:13 PM IST

நடிகர் துல்கர் சல்மானுக்கு (Dulquer Salmaan) தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ரசிகர்கள் அதிகம். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் காந்தா (Kaantha). இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படம் உண்மையான சம்பவத்தை மையமாக கொண்டு வெளியானது. இப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தது. இப்படத்திற்கு பின் மலையாளத்தில் ஐஅம் கேம் (Im Game), தெலுங்கில் ஸ்ரீ ஸ்ரீ (Sri Sri) மற்றும் ஆகாசம்லோ ஒக்க தாரா (Aakasamlo Oka Tara) போன்ற படங்களில் நடித்துவந்தார். இதில் இயக்குநர் ரவி நெளகுடிடி (Ravi Nelakuditi) இயக்கத்தில் நடித்துவந்த படம்தான் ஸ்ரீ ஸ்ரீ. இதில் பூஜா ஹெக்டே (Pooja Hegde) நாயகியாக நடித்துவருகிறார்.

இப்படத்திற்கு நேஷனல் விருது வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இன்று 2026ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியில், துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்திலிருந்து “வானே வானே” (Vaane vaane) என்ற தமிழ் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஷீ இஸ் மை செல்லகுட்டி… இம்மார்டல் படத்திலிருந்து வெளியானது இரண்டாவது சிங்கிள்

துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ ஸ்ரீ படக்குழு வெளியிட்ட வானே வானே பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

ஸ்ரீ ஸ்ரீ படத்தின் ரிலீஸ் எப்போது:

துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டேவின் கூட்டணியில் முதல் முறையாக உருவாகியுள்ள படம்தான் ஸ்ரீ ஸ்ரீ. இதற்கு முன் இந்த ஜோடி எந்த படங்களிலும் இணைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது சிறப்பான காதல் மற்றும் பள்ளிப்பருவ காதல் தொடர்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனமானது இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தி எட்டிய நிலையில், இன்னும் நிறைவடையவில்லை. துல்கர் சல்மானின் நடிப்பில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஐஅம் கேம் என்ற படமானது வெளியாகிறது.

இதையும் படிங்க: மதுரை கிராமம் பற்றி தவறான கருத்து? ஜனநாயகன் படத்துக்கு எதிராக புதிய வழக்கு – இயக்குநருக்கு நோட்டீஸ்

அதனால் ஸ்ரீ ஸ்ரீ படமானது 2026ம் ஆண்டு இறுதியில் அல்லது 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் புது புது படங்களிலும் ஆக்ஷன் நாயகனாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரின் தயாரிப்பில் உருவாக்கவுள்ள லோகா சாப்டர் 2 படத்தின் மிக முக்கியமான வேடத்தில் துல்கர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Follow Us