நஸ்லேனின் அடுத்தப் பட இயக்குநர் யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்
Naslens next film update viral on social media | மலையாள சினிமாவில் பிரபலமாக வலம் வருபவர் நடிகர் நஸ்லேன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மலையாள சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் நடிகர் நஸ்லேன். இவர் சினிமாவில் ஆரம்ப கலக்கட்டத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து நாயகன்களின் நண்பராக நடித்து வந்த நஸ்லேன் பிறகு படங்களில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி கடந்த 2024-ம் ஆண்டு மலையாள சினிமாவில் நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்த பிரேமலு படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்த அடுத்தப் படங்களில் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் மலையாள சினிமாவில் நடிகர் நஸ்லேன் நாயகனாக நடித்து இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மோலிவுட் டைம்ஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நஸ்லேன் தற்போது சூர்யாவின் 47-வது படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளர். இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகை நஸ்ரியா நசீம் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் நடிகர் நஸ்லேன் அடுத்ததாக நாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
நஸ்லேனின் அடுத்தப் பட இயக்குநர் யார் தெரியுமா?
அதன்படி நடிகர் நஸ்லேன் நாயகனாக நடிக்க உள்ள அடுத்தப் படத்தை பிரபல இயக்குநர் மது சி. நாராயணன் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக மலையாள சினிமாவில் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் மாபெரும் வரவேற்பைப் பெற்ற கும்பளங்கி நைட்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து அவர் தற்போது இரண்டாவதாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
Also Read… நாளை வெளியாகிறது ஓம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்… வைரலாகும் புரோமோ வீடியோ குறித்த அப்டேட்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Madhu C Narayanan’s long-awaited second directorial after the iconic #KumbalangiNights is officially on!
Starring #Naslen
Produced by #AnanthuEntertainments & Silent Cat Productions
Music Rex VijayanThis combination has all the ingredients for something special
Rolling Soon pic.twitter.com/Skxi6Uta2j
— Cine Safari (@CineSafari) July 27, 2026
Also Read… நீங்கள் என் மீது வைத்த அளவற்ற நம்பிக்கைக்கு நன்றி விஜய் சார் – அனிருத் ரவிச்சந்தர்



