AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பர்த்டே பாய் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய சிக்மா படக்குழு

Sigma movie team wishes Jason Sanjay a happy birthday | தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ள ஜேசன் சஞ்சய் பிறந்த நாள் கொண்டாடும் நிலையில் அவருக்கு படக்குழுவினர் வாழ்த்துகளை தெரிவித்து போஸ்ட் வெளியிட்டு உள்ளனர்.

பர்த்டே பாய் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய சிக்மா படக்குழு
ஜேசன் சஞ்சய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jul 2026 12:59 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது மூன்றாவது தலைமுறையாக களமிறங்கி உள்ளார் ஜேசன் சஞ்சய். இவரது தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் முதல் தலைமுறையாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்த போது இரண்டாவது தலைமுறையாக அவரது மகன் விஜய் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் கொண்டாடும் தளபதி விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது தற்போது தமிழ் நாட்டில் அரசியலில் களம் இறங்கி தற்போது முதலமைச்சராக ஆகி உள்ளார். இனி படங்களில் அவர் நாயகனாக நடிக்கப் போவதில்லை என்று தெரிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது தலைமுறையாக நடிகரும் முதலமைச்சருமான தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக தமிழ் சினிமாவில் தற்போது அறிமுகம் ஆகி உள்ளார். அதன்படி இயக்குநர் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் சிக்மா என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் படம் வருகின்ற 31-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரைய்ரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பர்த்டே பாய் ஜேசன் சஞ்சய்க்கு வாழ்த்து கூறிய சிக்மா படக்குழு:

இந்த நிலையில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் இன்று 25-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி உள்ள சிக்மா படத்தின் குழு தற்போது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து போஸ்ட் பதிவிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… மகுடம் படத்தில் பல ஆச்சரியங்களை செய்துள்ளேன் – விஷால் ஓபன் டாக்

சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Jana Nayagan: லீக்கானாலும் பீக் குறையல.. ஜன நாயகன் பட முதல் நாள் தமிழக வசூல் எவ்வளவு தெரியுமா?

Follow Us