AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகுடம் படத்தில் பல ஆச்சரியங்களை செய்துள்ளேன் – விஷால் ஓபன் டாக்

Actor and Director Vishal talks about Magudam movie | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாகவும் தற்போது இயக்குநராக அறிமுகம் ஆகி உள்ளார் விஷால். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் மகுடம் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மகுடம் படத்தில் பல ஆச்சரியங்களை செய்துள்ளேன் – விஷால் ஓபன் டாக்
மகுடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Jul 2026 18:25 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்து வருகிறார். நடிகராக பலப் படங்களில் நடித்த நடிகர் விஷால் அவ்வபோது படங்களில் பாடல்களையும் பாடி வருகிறார். தொடர்ந்து தற்போது அவர் படங்களை இயக்கவும் தொடங்கியுள்ளார். அதன்படி தற்போது நடிகர் விஷால் அவர் நடித்து உள்ள மகுடன் படத்தை அவரே இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் படத்தின் இயக்குநரும் நடிகருமான விஷால் சமீபத்தில் அளித்தப் பேட்டி இணையத்ஹில் வைரலாகி வருகின்றது.

மகுடம் படத்தில் பல ஆச்சரியங்களை செய்துள்ளேன்:

மகுடம் படத்தில் பல ஆச்சரியங்களை நான் அமைத்துள்ளேன். இப்படத்திற்காக நான் மூன்று விதமான தோற்றங்களில் நடித்துள்ளேன். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான தோற்றமும் உடல் மொழியும் உள்ளன. அவற்றை நான் மிகச் சிறப்பாக உயிர்ப்பித்துள்ளதாக நம்புகிறேன். அவற்றில் ஒன்று, மருத்துவப் பிரதிநிதியாகப் பணிபுரியும் நடுத்தர வர்க்கக் குடும்பஸ்தர். மற்றொன்று ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரம். மூன்றாவது, இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகர். இந்த மூன்று கதாபாத்திரங்களும் தங்களுக்குரிய தனித்துவத்தைக் கொண்டவை. ஒரு நடிகராக நான் கேமராவிற்கு முன்னால் நிற்க வேண்டியுள்ளது. அதே சமயம் இயக்குநராக கேமராவிற்குப் பின்னாலும் நான் செயல்பட வேண்டியுள்ளது.

Also Read… பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் – யாருக்கு ஜோடி தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு:

Also Read… பகவந்த் கேசரி ரீமேக்.. அந்த காட்சிகள் இன்னும் தொந்தரவு செய்ததாக முதல்வர் விஜய் சொன்னாரு – இயக்குநர் அனில் ரவிபுடி!

Follow Us