பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் – யாருக்கு ஜோடி தெரியுமா?
Kalyani Priyadarshan will make her Bollywood debut | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியர்தர்ஷன். இவர் அடுத்ததாக பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது தனது கடின உழைப்பின் காரணமாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு தாய் மொழி மலையாளம் என்றாலும் இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் தான் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். தெலுங்கு சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கிய கல்யாணி பிரியதர்ஷன் அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்துப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தற்போது மலையாள சினிமாவில் தான் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டில் திரையரங்குகளில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. அதில் ஒன்று லோகா சாப்டர் 1 சந்திரா மற்றும் ஓடும் குதிரை சாடும் குதிரை. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் சூப்பர் மேன் கதையை மையமாக வைத்து வெளியான லோகா படம் உலக அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள சினிமாவில் அதிக வசூல் பெற்ற படமாகவும் இந்தப் படம் உள்ளது குறிப்பிடத்தக்கது.




பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன்:
ஜெய் மேத்தா இயக்கும், உலக அழிவுக்குப் பிந்தைய ஸோம்பி திரில்லர் படமான பிரலேயில் ரன்வீருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ரன்வீரின் மனைவியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகா: சாப்டர் 1 சந்திரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கல்யாணி பிரியதர்ஷன் இந்த பிரம்மாண்டமான சர்வைவல் ஹாரர் படத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Also Read… ரவி மோகனின் புதுப் பட நாயகி இவரா? வைரலாகும் தகவல்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#KalyaniPriyadarshan Likely to Star Opposite #RanveerSingh😳
Kalyani is reportedly set to make her Bollywood debut opposite Ranveer in #Pralay a post-apocalyptic zombie thriller directed by Jai Mehta. She is expected to play Ranveer’s wife.
Fresh off the success of Lokah:… pic.twitter.com/0R58WUDEqo
— The South Cinemaa (@southcinemaaaa) July 23, 2026
Also Read… Trisha Krishnan: முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் பட FDFS-வை கண்டுகளித்த திரிஷா – வைரலாகும் வீடியோ!