நீ இறங்கி ஆடு கபிலா, இது நம்ம காலம்… சார்பாட்ட பரம்பரை படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது!
5 Years Of Sarpatta Parambarai Movie | நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சார்பாட்ட பரம்பரை. இந்தப் படம் வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருவது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான அட்ட கத்தி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படத்தில் இருந்து அடுத்தடுத்து இதுவரை இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் பிசியான இயக்குநராக வலம் வரும் இயக்குநர் பா ரஞ்சித் இறுதியாக தங்கலான் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் முன்னதாக இயக்குநர் பா ரஞ்சித் எழுதி இயக்கி நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பாட்டா பரம்பரை படம் தற்போது 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தப் படம் கொரோனா காலத்தில் உருவானதால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. நடிகர் ஆர்யா நடிப்பில் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி ஜூலை மாதம் 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் இன்றுடன் 5 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது.




சார்பாட்ட பரம்பரை படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தது:
ஸ்போர்ஸ்ட் ட்ராமா பாணியில் பாக்ஸிங் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த சார்பாட்ட பரம்பரை படம் 70களில் வட சென்னை பகுதியில் நடைபெறுவது போல காட்டப்படுகின்றது. தலித் இளைஞரான ஆர்யா பாக்ஸிங் மீது இருந்த ஆர்வம் காரணமாக அந்த விளையாட்டை கற்றுக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கையில் என்ன எல்லாம் சந்திக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை படக்குழு கொண்டாடி வருகின்றது.
சார்பாட்ட பரம்பரை படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
An untamable spirit’s journey to glory!
5 years since Kabilan proved to the world: The Ring and the crowds belong to him #5yearsofSarpatta #5yearsofSarpattaParambarai
சார்பட்டா பரம்பரை
A #PaRanjith knockout 🥊@beemji @arya_offl @Music_Santhosh @K9Studioz @officialdushara pic.twitter.com/AcG2Xmfrgw— Neelam Productions (@officialneelam) July 22, 2026
Also Read… Im Game: துல்கர் சல்மானின் ‘ஐஅம் கேம்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வெளியான அறிவிப்பு!