ஃபகத் பாசில் – பிரேம் குமார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்
Fahadh Faasil and Premkumar movie story viral on social media | மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் மலையாள சினிமாவில் நாயகனாக நடித்து இருந்தாலும் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் பழம்பெரும் இயக்குநராக இருப்பவர் பாசில். இவர் மலையாள சினிமாவில் மட்டுமின்றி தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து படங்களை இயக்கி இருந்தார். இவரது மகனாக சினிமாவில் அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் ஃபகத் பாசில் தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்தது இதயம் முரளி படத்தில் தான்.
இந்தப் படத்தில் அவர் ஒரு முழு நீள கேமியோவில் நடித்து இருந்தார். இந்த இதயம் முரளி படத்தில் நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ஃபகத் பாசில் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இது தொடர்பான அறிவிப்புகள் முன்பே வெளியான நிலையில் படத்தின் கதை என்ன என்பது குறித்த அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஃபகத் பாசில் – பிரேம் குமார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமா?
இயக்குநர் பிரேம்குமாருடன் ஃபஹத் ஃபாசில் இணையும் அடுத்த திரைப்படம், ஒரு சாகச மற்றும் அதிரடி கலந்த ‘ரோட் ட்ரிப்’ (road trip) வகையைச் சேர்ந்த த்ரில்லர் படமாகும். சமீபத்தில், 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக ஃபஹத் ஃபாசில் படப்பிடிப்பிலிருந்து இடைவேளை எடுத்திருந்தார். அவர் திரும்பியதும் திருப்பதியில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இப்படத்தின் பெரும்பகுதி சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் படமாக்கப்படவுள்ளது என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#FaFa’s next film with director #Premkumar is an adventure action-thriller road trip movie. Recently, #FahadhFaasil took a break from shooting to watch the #FIFAWorldCup2026 Final. Once he returns, shooting will resume in Tirupati, with the majority of the film being shot on… pic.twitter.com/BC9cRJtSpR
— Movies Singapore (@MoviesSingapore) July 20, 2026
Also Read… ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ