AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லீக்கான படத்திலிருந்து புது விஷயங்கள் இப்படத்திலும் இருக்கு – ஜன நயகன் படம் குறித்து எச். வினோத் பேச்சு!

H Vinoth About Jana Nayagan: தமிழ் சினிமாவில் பேமஸான இயக்குநர்களில் ஒருவர்தான் எச் வினோத். இவரின் இயக்கத்தில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன். இப்படம் லீக்காகி பிரச்சனையான நிலையில், இதில் மாற்றம் செய்யப்பட்ட விஷயங்கள் குறித்து இயக்குநர் எச் வினோத் விளக்கமாக பேசியுள்ளார்.

லீக்கான படத்திலிருந்து புது விஷயங்கள் இப்படத்திலும் இருக்கு – ஜன நயகன் படம் குறித்து எச். வினோத் பேச்சு!
ஜன நாயகன் படம் பற்றி எச் வினோத்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Jul 2026 17:06 PM IST

கோலிவுட் சினிமாவில் 2026ம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி தயாராகிவரும் படம்தான் ஜன நாயகன்( Jana Nayagan). இந்த படமானது முதல்வர் விஜய் (CM Vijay), தமிழ் சினிமாவில் இறுதியாக நடித்திருந்த திரைப்படம். இப்படத்திற்கு அடுத்ததாக அவர், முழுவதுமாக சினிமாவிலிருந்து விலகியுள்ளார். அந்த வகையில் இவர் நடித்திருந்த கடைசி திரைப்படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் எச் வினோத் (Director H Vinoth). இவர் தமிழில் அஜித் குமார் மற்றும் கார்த்தி போன்ற பிரபலங்களின் படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய்யின் கடைசி படத்தையும் இவரே இயக்கியுள்ளார். இந்த படமானது முழுக்க முழுக்க அரசியல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்சார் பிரச்சனைகளால் ரிலீஸ் தாமதமாக்கப்பட்டுவந்த நிலையில், 7 மாதங்களுக்கு பின் 2026ம் ஆண்டு ஜூலை 23ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அந்த விதத்தில் இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. அண்மையில், நேர்காணல் ஒன்றில் பேசிய எச் வினோத், ஜன ஜன நாயகன் படத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: இன்னும் 3 நாட்களில்… புது போஸ்டரை வெளியிட்ட ஜன நாயகன் படக்குழு!

லீக்கான ஜன நாயகன் படத்திலிருந்து ரிலீசாகும் படத்தில் உள்ள மாற்றங்கள் பற்றி எச் வினோத்:

சமீபத்தில் இன்டெர்வியூ ஒன்றில் பேசிய எச் வினோத், அதில், “சென்சார் குழு, நாங்கள் முதலில் ஜன நாயகன் படத்தின் சென்சாருக்கு பதிவு செய்யும்போதே, கதை மற்றும் காட்சிகளில் எங்தக மாற்றத்தையும் அவர்கள் செய்யவிரும்பவில்லை. கதையில் எந்த மாற்றங்களையும் செய்யவேண்டாம் என்றே அவர்களும் சொன்னார்கள். அதனால் நாங்களும் பெரிய மாற்றங்கள் எதுவும் பண்ணவில்லை.

இதையும் படிங்க: அரசன் படத்தின் காட்சிகளைப் பார்த்து திருப்தியடைந்த தயாரிப்பாளர்? வைரலாகும் தகவல்

மேலும் இணையத்தில் லீக்கான ஜன நாயகன் படத்திலிருந்து, தற்போது வெளியாகும் படத்தில் இயற்கையாகவே பல மாற்றங்கள் இருக்கு. ஏனென்றால் தற்போது ஏ சென்சார் கிடைத்துள்ளது. பழைய சென்சாரில் நீக்கப்பட்ட ல்காட்சிகள் எல்லாம், தற்போது நீக்கப்படாமலே உள்ளது. அதனால கொஞ்சம் புதிதாக விஷயங்கள் இப்படத்தில் இருக்கிறது” என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர் குறித்த எக்ஸ் பதிவு:

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், டிக்கெட் முன்பதிவு சூடுபிடித்துள்ளது. இப்படம் இதுவரை உலகளவில் டிக்கெட் ப்ரீ புக்கிங்கிலே கிட்டத்தட்ட ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாம். மேலும் இன்னும் வெளியீட்டிற்கு பின் அதிகமாக வசூல் செய்யும் என கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சூடுபிடித்துள்ளது. இப்படம் ஏற்கனவே இணையத்தில் லீக்காகியிருந்தாலும், திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Follow Us