AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!

Dhyan Sreenivasans Controversial CM Vijay Comments: கடந்த சில நாட்களாக தென்னிந்திய சினிமாவில் அனைவரின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திவரும் நடிகர்தான் தியான் ஸ்ரீனிவாசன். இவர் தமிழக முதல்வர் விஜயை குறித்து கிண்டல் செய்து பேசியிருந்தார். இது ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரை குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார்.

அவர் செய்தது போல நான் எதுவும் செய்யமாட்டேன்.. முதல்வர் விஜயை மீண்டும் கிண்டல் செய்த மலையாள நடிகர்!
முதல்வர் விஜய் மற்றும் தியான் ஸ்ரீனிவாசன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 19 Jul 2026 14:10 PM IST

மலையாள சினிமாவில் பிரபலமான 80ஸ் நடிகராக இருந்தவர் ஸ்ரீனிவாசன் (Sreenivasan). இவரின் மகனாக தற்போது மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் தியான் ஸ்ரீனிவாசன் (Dhyan Sreenivasan). இவர் பேசிய விஷயம் கடந்த சில நாட்களாக திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இவரின் நடிப்பில் “விசிட்டர்” (Visitor) என்ற படமானது வெளியாக காத்திருக்கும் நிலையில், அதன் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் முதலில், பேசும்போது அவர் திரிஷாவை (Trisha) தாக்கி பேசியிருந்தார். தியான் ஸ்ரீனிவாசன், நடிகை நவ்யா நாயரிடம், “நான் முதல்வரானது, நீ பட்டுப்புடவை மற்றும் வைர நகையை போட்டு வரவேண்டும்” என பேசியிருந்தார். இது ஏற்கனவே இணையத்தை பரபரப்பரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு நடிகர் அஜூ வர்கீஸ் (Aju Varghese) மன்னிப்பு கேட்டிருந்தார். அதையடுத்து மீண்டும் சமீபத்தில், நேரடியாக முதலமைச்சர் விஜயை கிண்டல் செய்துப் பேசியுள்ளார். இது தற்போது தமிழக மக்கள் மற்றும் விஜயின் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

முதல்வர் விஜய் குறித்து மீண்டும் கிண்டல் செய்து பேசிய தியான் ஸ்ரீனிவாசன்:

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தியான் ஸ்ரீனிவாசன், “அவர் முதலமைச்சராகத் தயாராகி வரும் நிலையில், ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் விஜய் செய்தது போல கேரளாவிலும் செய்ய விரும்புகிறீர்களா என்று தொகுப்பாளர் கேட்டபோது, ​​தியானின் பதில் இதுவாக இருந்தது. ‘நான் முதலில் ‘அம்மா’வின் தலைவராவேன், 13 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோசப் விஜய் சொல்வது போல் வருவேன். ஆனால், அவர் செய்த எதையும் நான் செய்ய மாட்டேன், இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என அதில் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விவசாயத்தில் விஷம்.. காஜல் அகர்வாலின் தி இந்திய ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் இதோ!

அதன் பிறகு பேசிய அஜூ வர்கீஸ், “தியானால் இனி தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியாது” என்று முதல் நிகழ்ச்சியின் மேடையில் நகைச்சுவையாகக் கூறியிருந்தார். சமூக ஊடகங்களில் வரும் கருத்துக்கள், விஷயங்கள் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

முதல்வர் விஜய் குறித்து தியான் ஸ்ரீனிவாசன் பேசிய வீடியோ பதிவு:

தமிழக முதல்வர் விஜய் குறித்து , நடிகர் தியான் ஸ்ரீனிவாசன் சர்ச்சையாக பேசியிருந்த நிலையில், தற்போது அவர் மீது கேரளாவிலும் பலர் பேசி வருகிறார்கள். இந்நிலையில் இதற்கு தமிழக அரசு அல்லது தொண்டர்களால் எதுவும் சட்டப்படி நடவெடிக்கைகள் எடுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us