Dhyan Sreenivasan: இணையத்தில் பேசுபொருளாகியுள்ள இந்த தயன் ஸ்ரீனிவாசன் யார் தெரியுமா?
Malayala Actor Dhyan Sreenivasan | மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன். இவர் தற்போது பான் இந்திய அளவில் வைரலாகி வரும் நிலையில் அவர் யார் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படங்களைத் தாண்டி இவர் புரமோஷன்கள் மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு பேசும் போது அதிக அளவில் வைரலாவது வழக்கம். முன்பு எல்லாம் இவர் பேசுவது மலையாள திரையுலகிலும் கேரள மக்களிடையே மட்டும் அதிக அளவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் சமீபத்திய பட விழாவில் தயன் பேசியது மலையாள சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய அளவில் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து பேசுபொருளாகி வருகிறார். அவர் பேசியது தமிழக மக்களிடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியது என்றும் கூறலாம். மலையாள சினிமாவில் பிரபலமாகி உள்ள இவர் யார் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தயன் ஸ்ரீனிவாசனின் தந்தை யார்?
மலையாள சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருந்தவர் ஸ்ரீனிவாசன். இவரது இரண்டாவது மகன் தான் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன். மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசன் கடந்த 1970களில் தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்து. தொடர்ந்து மலையாள சினிமாவில் பல நூறு படங்களில் நடித்த ஸ்ரீனிவாசன் அவ்வபோது தமிழ் சினிமாவிலும் படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் நடிகர் ஷ்யாம் நடிப்பில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற லேசா லேசா படத்தில் ஷ்யாமின் மேனேஜராக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி மலையாள சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் தான் தயன் ஸ்ரீனிவாசன். இவர் மலையாள சினிமாவில் பலப் படங்களில் நடித்து வருகிறார்.




தயன் ஸ்ரீனிவாசனின் அண்ணன் யார் தெரியுமா?
நடிகர் தயன் ஸ்ரீனிவாசனின் தந்தை பழம்பெரும் நடிகர் என்பது போல அவரது அண்ணன் வினீத் ஸ்ரீனிவாசன் சினிமாவில் நடிகர், இயக்குநர் மற்றும் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார். இவர்தான் தென்னிந்திய சினிமாவில் குறிப்பாக தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஹ்ரிதயபூர்வம் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமா பின்னணி மிகவும் பிரபலமாக உள்ள குடும்பத்தில் தான் நடிகர் தயன் ஸ்ரீனிவாசன் பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… லோகேஷ் கனகராஜின் டிசி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் குழு
இணையத்தில் வைரலாகும் தயன் ஸ்ரீனிவாசனின் பேச்சு:
The day I take the oath as CM… I think Navya will be there in the front row wearing a saree…!!
– Dhyan Sreenivasan 😂 pic.twitter.com/UT5GvyK8Fq
— Trollywood 𝕏 (@TrollywoodX) July 16, 2026
Also Read… திரையரங்குகளில் வெற்றிநடை போடும் இதயம் முரளி படம் – கொண்டாட்டத்தில் படக்குழு