Kajal Aggarwal: விவசாயத்தில் விஷம்.. காஜல் அகர்வாலின் தி இந்திய ஸ்டோரி படத்தின் ட்ரெய்லர் இதோ!
The India Story Trailer: தென்னிந்திய சினிமாவில், பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்துவருபவர் காஜல் அகர்வால். இவர் லீட் நாயகியாக நடித்துள்ள புதிய திரைப்படம்தான் தி இந்தியா ஸ்டோரி. இப்படம் வரும் ஜூலை 24ம் ஹிந்தியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சவுத் இந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் காஜல் அகர்வால் (Kajal Aggarwal). இவர் கதாநாயகியாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். இவர் தமிழ் சினிமாவில் முதல்வர் விஜய் (CM Vijay) முதல் சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் தனது திருமணத்திற்கு பின் பெரிதாக எந்த படங்களிலும் நடிக்கவில்லை என்று இருந்த நிலையில், தற்போது அவர் லீட் நாயகியாக நடித்திருக்கும் புது படம்தான் தி இந்தியா ஸ்டோரி (The India Story). இதை பாலிவுட் இயக்குநர் சேட்டன் டிகே (Cheytan Dk) இயக்கியிருந்த நிலையில், இதன் கதையை சாகர் பி ஷிண்டே எழுதியிருந்தார்.
இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க அவருடன் பாலிவுட் நடிகர் அஷ்வின் பாண்டே மற்றும் ஹார்டிகா ஜோஷி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: தமிழகத்தில் ஜன நாயகன் பட டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும்? – வைரலாகும் தகவல்!
நடிகை காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தின் ட்ரெய்லர் குறித்த எக்ஸ் பதிவு:
Some battles begin with grief.
Others begin with courage.
This is a story of conviction! #TheIndiaStoryTrailer Out Now ❤️🔥pic.twitter.com/ThD5fwuarQ#TheIndiaStory, Slow Poison In Progress… releasing in cinemas on 24th July 2026, in Hindi, Tamil, and Telugu.…— Ramesh Bala (@rameshlaus) July 18, 2026
காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி ட்ரெய்லர் எப்படி இருக்கிறது:
இப்படமானது தி இந்தியா ஸ்டோரி திரைப்படமானது விவசாயத்தில் கலக்கப்படும் விஷம் குறித்த கதைக்களத்தில் அமைந்துள்ளது. விவசாயத்திற்காக பயன்படுத்தப்படும் ரசாயனக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்ட கதையில் உருவாகியுள்ளது. இதில் நடிகை காஜல் அகர்வால் வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் நடிகர் அஷ்வின் பாண்டே ராணுவ வீரனாகவும், குழந்தையின் தகப்பனாகவும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: தேசிய விருது வென்ற அமரன் படக்குழு.. வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!
பூச்சி கொல்லி என்ற மெதுவான ரசாயன கொல்லியால் பாதிக்கப்பட்டு இறக்கும் குழந்தை அந்த குழந்தைக்காக நியாயம் கேட்கும் வக்கீலாக காஜல் நடித்துள்ளார். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் இணையத்தில் மாபெரும் வரவேற்பை பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.