Kajal Aggarwal: காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் டீசர் வெளியானது!
The India Story Teaser: சினிமாவில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் காஜல் அகர்வால். இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் தயாராகியுள்ள திரைப்படம்தான் தி இந்தியா ஸ்டோரி. இந்நிலையில் இப்படத்தின் முதல் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் காஜல் அகர்வால் (Kajal Aggarwal). இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட இவர், தற்போது இந்தி சினிமாவில் படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். கடந்த 2025ம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) மற்றும் மற்றும் சல்மான்கான் (Salma Khan) கூட்டணியில் வெளியான சிக்கந்தர் (Sikandar) படத்தில் மிக முக்கியமான வேடத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவர் இந்தி சினிமாவிலே படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் தயாராகியுள்ள படம்தான் தி இந்தியா ஸ்டோரி (The India Story). இதை இயக்குநர் சேட்டன் டிகே (Chettan DK) இயக்க, காஜல் அகர்வால் லீட் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படமானது விரைவில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இன்று 2026 ஜூன் 5ம் தேதியில் இப்படத்தின் டீசரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது. விவசாய மற்றும் விவசாயத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான கதைக்களத்தில் இப்படமானது தயாராகியுள்ளது.




இதையும் படிங்க: ராம் சரணின் பெத்தி படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்ததா? உற்சாகத்தில் படக்குழு
காஜல் அகர்வாலின் தி இந்தியா ஸ்டோரி படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
The numbers are public. The consequences are visible. Then why does the truth still feel hidden?
Witness the truth unfold in #TheIndiaStory, Slow Poison In Progress… releasing in cinemas on 24th July 2026.
Releasing in 3 languages #Hindi #Tamil #Telugu… pic.twitter.com/dZZl7L4hy4— Zee Studios South (@zeestudiossouth) June 5, 2026
தி இந்தியா ஸ்டோரி படமானது விவசாயத்தில் நடக்கும் கிரைம் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் தொடர்பான ஒரு வித்தியாசமான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் வெளியாக தயாராகியுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயஸ் தல்படே, முரளி சர்மா, மனிஷ் வடிவா. திரிஷா சரதா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் சிறப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பாண்டிராஜின் டார்க் காமெடி த்ரில்லர் வொர்க் ஆனதா? பரிமளா அண்ட் கோ படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
தி இந்தியா ஸ்டோரி படத்தின் ரிலீஸ் எப்போது:
இது முற்றிலும் கிரைம் திரில்லர் மற்றும் சுவாரஸ்ய திருப்பங்கள் கொண்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படமானது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தை வரும் 2026 ஜூலை 24ம் தேதியில் வெளியிடுவதற்காக படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.