ராம் சரணின் பெத்தி படம் முதல் நாளில் மட்டும் இவ்வளவு வசூல் செய்ததா? உற்சாகத்தில் படக்குழு
Peddi Movie First Day BoX Office Collection | நடிகர் ராம் சரண் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி நேற்று திரையரங்குகளில் வெளியான படம் பெத்தி. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் எவ்வளவு வசூல் செய்தது என்று தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவரது நடிப்பில் நேற்று ஜூன் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது பெத்தி படம். தெலுங்கு மொழியில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள புஜ்ஜி பாபு சனா இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகி இருந்தாலும் கிராமபுரங்களில் நிலவும் தீண்டாமை குறித்தும் இந்தப் படத்தில் பேசியுள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.
இந்தப் படத்தில் நடிகர் ராம் சரண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடித்து இருந்தார். இவர் தற்போது இந்தி சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து ஜெகபதி பாபு, சிவராஜ்குமார், திவ்யேந்து, ரவி கிஷன், போமன் இரானி, விஜி சந்திரசேகர், சத்யா, ராஜதவ தத்தா, ஜான் விஜய் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.




முதல் நாளிலேயே வசூலில் 130 கோடிகளைக் கடந்தது பெத்தி படம்:
நடிகர் ராம் சரணனின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பெத்தி படம் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து படக்குழு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பெத்தி படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 135.36 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சிக்மா படத்தின் முதல் சிங்கிளை இன்று வெளியிடுகிறார் துல்கர் சல்மான்
பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Box office CHAMPION – #PEDDI SIR
💥💥💥💥💥💥 135.36 CR+ GROSS WW on Day 1 ❤️🔥❤️🔥Meet #PEDDI now in cinemas ❤️🔥
Book your tickets now 💥💥https://t.co/xclVAMz8oI pic.twitter.com/AhpZL37Ypg— Mythri Movie Makers (@MythriOfficial) June 5, 2026
Also Read… ராம் சரணின் கெரியர் பெஸ்டாக அமைந்ததா பெத்தி படம்? மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ