AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிக்மா படத்தின் முதல் சிங்கிளை இன்று வெளியிடுகிறார் துல்கர் சல்மான்

First Single From Singma Movie Will Be Out Today | தமிழ் சினிமாவில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் படம் சிக்மா. இந்தப் படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று படத்தின் முதல் சிங்கிள் வெளியாக உள்ளது.

சிக்மா படத்தின் முதல் சிங்கிளை இன்று வெளியிடுகிறார் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Jun 2026 12:48 PM IST

தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமான நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளவர் தளபதி விஜய். இவர் சினிமாவில் படங்களில் நடிக்கும் போதே இவரதுக்கு மக்கள் மத்தியில் பேராதரவு இருந்தது. இந்த நிலையில் இவர் சினிமாவை விட்டு விலகி தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார். அரசியலில் மாற்றம் வேண்டும் நினைத்த மக்கள் புதிதாக வந்த விஜயை ஆதரித்து அவரை வெற்றிப் பெற செய்து முதலமைச்சராகவும் ஆக்கி உள்ளனர். இந்த நிலையில் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகிய இந்த வேலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் நாயகனாக வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் இயக்குநராக களம் இறங்கி உள்ளார்.

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்குநராக உள்ள படத்திற்கு சிக்மா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடித்து உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சிக்மா படத்தின் முதல் சிங்கிளை வெளியிடும் துல்கர் சல்மான்:

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த சிக்மா படம் வருகின்ற ஜூலை மாதம் 31-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட உள்ளது. மேலும் அந்த சிங்கிள் வீடியோவை இன்று மாலை துல்கர் சல்மான் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Also Read… D 55 படத்தில் தனது போர்ஷனை முடித்த மம்முட்டி – வைரலாகும் தகவல்

சிக்மா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கடினமாக உழைக்கக்கூடியவர் ஜேசன் சஞ்சய் – நடிகர் சந்தீப் கிஷன்

Follow Us