அஸ்வத் மாரிமுத்து பர்த்டே… ஸ்பெஷல் வீடியோ வெளியிட்ட ராஜ் கமல் ஃபிலிம்ஸ்
Director Aswath Marimuthu's birthday special video posted Raj Kamal Films International | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இவரது இயக்கத்தில் முதலாவதகாக தமிழ் சினிமாவில் வெளியான படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ஃபேண்டசி காமெடி பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரி முத்து இயக்கத்தில் உருவான படம் ட்ராகன். நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் அந்தப் படத்தில் நாயகனாக நடித்து இருந்தார். அந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் அதிக அளவில் வசூலை குவித்தது. அது மட்டும் இன்றி விமர்சன ரீதியாகவும் மக்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் அந்தப் படத்தின் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அது தொடர்பாக பல பேட்டிகளிலும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் சூழலில் இன்று அஸ்வத் மாரிமுத்து பிறந்த நாளை முன்னிட்டு ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாழ்த்து பதிவை வெளியிட்ட இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.




அஸ்வத் மாரிமுத்து பர்த்டே வீடியோ வெளியிட்ட ராஜ் கமல் ஃபிலிம்ஸ்:
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக இயக்குநர்கள் சுந்தர் சி மற்றும் சிபி சக்ரவர்த்தி இருவரும் பேசப்பட்டு பிறகு விலகினர். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியது அதனை உறுதி செய்யும் விதமாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… கோலிவுட் டூ டோலிவுட்.. இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் யார்? அட இவர் பிரபல இயக்குநர்!
ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
From Imagination to Inspiration
Birthday wishes to Director @Dir_Ashwath#HBDAshwathMarimuthu #AshwathMarimuthu pic.twitter.com/3qoU2gV6EV— Raaj Kamal Films International (@RKFI) June 2, 2026
Also Read… கட்டா குஸ்தி 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஷ்ணு விஷால் – வைரலாகும் வீடியோ