AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா சார் அதைச் செய்ய நான்தான் வற்புறுத்தினேன் – கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி

RJ Balaji talks viral dialogue in Karuppu Movie | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தில் வந்த வசம் ஒன்று ரசிகர்களிடையே படு வைரலானது. அது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

சூர்யா சார் அதைச் செய்ய நான்தான் வற்புறுத்தினேன் – கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி - சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 May 2026 11:06 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி 15 நாட்கள் நிறைவடைந்த நிலையில் உலகம் முழுவதும் மொத்த வசூல் ரூபாய் 300 கோடிகள் வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது நடிகர் சூர்யாவின் சினிமா கெரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வசூலைப் பெற்றப் படமாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படத்தின் வெற்றியை ஒரு பக்கம் படக்குழு கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு பக்கம் சூர்யாவின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

கோர்ட் ரூம் ட்ராமாவை மையமாக வைத்து நீண்ட காலமாக கிடைக்காத நீதிக்காக கருப்பு சாமியே வந்து பக்தர்களுக்காக வாதாடுவது போல காட்சி அமைக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் கருப்பு படத்தில் வரும் வைரல் டயலாக் ஒன்றை சூர்யா பேச மறுத்தது குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

கருப்பு படத்தின் வைரல் டயலாக் குறித்து பேசிய ஆர்.ஜே.பாலாஜி:

மூக்குத்தி அம்மன் படத்துக்கு மூனு டிக்கெட் இருக்கு என்ற வசனத்தை முதலில் சூர்யா சார் கூற தயாராக இல்லை. நான் அவரை வற்புறுத்தினேன். ஏன், எனது மற்ற படங்களின் பெயர்களைக் கூட அவரிடம் குறிப்பிட்டுக் காட்டினேன். அவரோ, நான் அதைச் செய்யவே மாட்டேன், செய்யவே மாட்டேன், செய்யவே மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார். படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்பு, அந்தப் பகுதியை நீக்கிவிடுமாறு அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

நாம் மற்றவர்களின் படங்களைக் கேலி செய்யக்கூடாது, என்று அவர் கூறினார். அவர் மிகவும் நல்ல மனிதர். அதற்கு நான் அவரிடம், சார், இந்தப் படத்தை இயக்கியதே நான்தான். பரவாயில்லை சார், என்று கூறினேன். திரையரங்குகளில் அந்த வசனத்திற்குப் பார்வையாளர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது ரசிகர்கள் ஆரவாரத்தில் திளைத்தனர்.

ஆனால் அந்தப் படம் ஒரு ஓடிடி வெளியீடாக அமைந்தது. ஒரு ஓடிடி படத்திற்கு எப்படி டிக்கெட் வாங்க முடியும் என்றெல்லாம் மக்கள் அதன் தர்க்கரீதியான அம்சங்களைக் கேள்வி எழுப்ப மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். சினிமாவே ஒருவித மாயம்தான். ஓடிடியில் ஒரு படம் வெளியாகிவிட்ட பிறகு, வாங்க இதோ எடுத்துக்கொள்ளுங்கள், இதோ வாங்கிக்கொள்ளுங்கள் என்று ரசிகர்கள் எதைச் சுட்டிக்காட்டினாலும், அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று அவர் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Dhanush: நான் அதற்காகவே கார்த்தியின் பருத்திவீரன் படத்தை பார்த்தேன் – தனுஷ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

இணையத்தில் வைரலாகும் ஆர்.ஜே.பாலாஜி பேச்சு:

Also Read… அரசன் படத்தில் சிம்புவின் ஜோடி அந்த நடிகையா? இணையத்தில் வைரலாகும் அப்டேட்

Follow Us