இணையத்தில் வைரலாகும் அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ – சிம்பு கூட யார் இருக்காங்க தெரியுமா?
Arasan movie shooting spot photo viral on social media | தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் தற்போது நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் அரசன். இயக்குநர் வெற்றி மாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி வருகிறார். சிலம்பரசன் மற்றும் வெற்றி மாறனின் கூட்டணி அமைவது இதுவே முதன்முறையாகும். வெற்றிமாறன் நடிகர் தனுஷின் ஆதர்சன இயக்குநர் ஆவார். அவர்கள் கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிம்பு உடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்தது அவர்களின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அரசன் படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் கடந்த 2025-ம் ஆண்டின் இறுதியில் இந்த அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக சென்ற நிலையில் இடையில் சிறிது நாட்கள் சிம்புவின் முந்தைய படத்தின் பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவடைந்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வட சென்னை பட நடிகர்:
முன்னதாக அரசன் படம் வட சென்னை பகுதியை மையமாக வைத்து உருவாகும் என்றும் தனுஷ் நடிப்பில் வெளியான வட சென்னை படத்தின் நடிகர்கள் சிம்புவின் இந்த அரசன் படத்திலும் நடிக்கிறார்கள் என்ற தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தது. மேலும் இந்தப் படத்தில் நடிப்பது குறித்து வட சென்னை பட நடிகர்களும் பேட்டிகளில் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அரசன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த புகைப்படத்தில் வட சென்னை படத்தில் செந்தில் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் கிஷோர் நடிகர் சிம்புவுடன் இருக்கிறார். இது தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தளபதி விஜயின் அரசியல் வெற்றியைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன் – பவன் கல்யாணின் கலகல பேச்சு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு;
Arasan & senthil spotted together in yesterday’s night shoot 🫣🔥
Vetrimaaran what are you cooking man 😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🧨🧨🧨🧨#Arasan pic.twitter.com/DCO2hJION1
— EthiRaj 💥 (@Ethiraj25) May 27, 2026
Also Read… ஆக்ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது!