AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது!

Blast Movie Booking Open Now | நடிகர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ப்ளாஸ்ட். இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி உள்ளதாக படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது தற்போது வைரலாகி வருகின்றது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது!
ப்ளாஸ்ட்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 May 2026 15:34 PM IST

நடிகர் அர்ஜுன் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் அர்ஜுன் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியான படம் தீயவர் குலை நடுங்க. இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் சீதா பயணம் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக நடிக்க நடிகர் நிரஞ்சன் சுதீந்திரா நாயகனாக நடித்து இருந்தார். பயணம் தொடர்பான ரொமாண்டிக் ட்ராமாவாக வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வரும் அர்ஜுன் தற்போது தமிழ் சினிமாவில் ப்ளாஸ்ட் என்ற படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ப்ளாஸ்ட் படத்தின் புக்கிங் தொடங்கியது:

அதன்படி ப்ளாஸ்ட் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் படத்தின் புக்கிங் பணியை படக்குழு தொடங்கியுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு நன்றிகள் – ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட கார்த்தி

ப்ளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விஜய் பதவி ஏற்பு.. முதல் வரிசையில் மூன்று பேர் மிஸ்ஸிங்.. குடும்பம் குறித்து பேசிய சமுத்திரக்கனி!

Follow Us