உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு நன்றிகள் – ரசிகர்களுக்காக நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட கார்த்தி
Karthi thanked his fans | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் கார்த்தி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு நன்றி தெரிவித்து கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் கார்த்தி. சினிமா குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் சினிமாவில் இயக்குநரகா ஆக வேண்டும் என்று முயற்சித்தார். ஆனால் காலம் இவரை நடிகராக மாற்றி மக்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்க வைத்தது. தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி படங்களில் நடிப்பது மட்டும் இன்றி சொந்த வாழ்க்கையிலும் தனது மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பவர். இவரது அண்ணன் நடிகர் சூர்யா ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு பாடுபடுகிறார் என்றால் கார்த்தியோ விவசாயிகளின் நலனில் அதிக அக்கரை செலுத்தி வருகிறார். மேலும் இவர் நடிக்கும் படங்களிலும் விவசாயிகளின் கஷ்டம் மற்றும் அவர்கள் நம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்பதையும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
நாமும் நடிகர் ஒரு படம் நடித்துவிட்டு செல்கிறோம் என்று இல்லாமல் தனது படங்களின் மூலம் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று நினைக்கும் கார்த்தி நேற்று 25-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதற்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை மழையாக பொழிந்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கார்த்தி வெளியிட்ட பதிவி இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.




என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய நன்றி:
அந்த எக்ஸ் தள பதிவில் நடிகர் கார்த்தி கூறியதாவது, என்னைத் தொடர்ந்து அளவற்ற அன்பாலும் ஆசீர்வாதங்களாலும் திளைக்கச் செய்யும் என் சகோதர சகோதரிகளுக்கு நான் எப்படி நன்றி சொல்வது! உங்கள் இதயங்களை வெல்வதற்கும், உங்களுக்குப் பெருமை சேர்ப்பதற்குமே நான் வாழ்கிறேன்; அதற்காகவே நான் அயராது உழைக்கிறேன். உங்கள் கருணையாலும் பாசத்தாலும் என்னை நெகிழச் செய்ததற்கு மீண்டும் ஒருமுறை என் நன்றிகள்.
உங்கள் நல்வாழ்த்துகளுக்கும் ஆதரவிற்கும், என் சக ஊழியர்களுக்கும், ஊடகத்துறையைச் சார்ந்த மதிப்பிற்குரிய நண்பர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். நான் என்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்பேன்! மேலும், எத்தனையோ நற்செயல்களின் வாயிலாக என் பிறந்தநாளைக் கொண்டாடத் தேர்ந்தெடுத்த என் அன்பு ரசிகர்களுக்கு… என் இதயத்தின் ஆழத்திலிருந்து ஒரு பெரிய நன்றி உங்கள் அன்புதான் எனக்கு எல்லாமே என்று தெரிவித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
Also Read… மம்முட்டிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்த மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் – வைரலாகும் பதிவு!
நடிகர் கார்த்தி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
How do I thank my brothers and sisters who continue to shower me with so much love and blessings! I live and strive to win your hearts and make you proud. Thank you once again for overwhelming me with your kindness and affection.
My sincere thanks to my colleagues and respected… pic.twitter.com/8ZXC87Yy2q
— Karthi (@Karthi_Offl) May 26, 2026
Also Read… தமிழ் நாட்டில் மட்டும் 10 நாட்களில் கருப்பு படம் வசூலித்தது இத்தனை கோடிகளா? அப்டேட் கொடுத்த படக்குழு