கார்த்தியின் பிறந்த நாள் ஸ்பெஷல்… போஸ்டரை வெளியிட்ட மார்ஷல் படக்குழு!
Marshal Film Crew Releases Poster for Karthis Birthday | தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் கார்த்தி. இவர் இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் மார்ஷல் படக்குழு போஸ்டரை வெளியிட்டு உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளியான படங்கள் பெரும்பாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களில் நடிக்காமல் கிராமத்து இளைஞராகவும், சிட்டி இளைஞராகவும், ரொமாண்டிக் நாயகனாகவும், ஆக்ஷன் நாயகனாகவும் என எந்தவிதமான கேரக்டராக இருந்தாலும் அதற்கு அப்படியே பொருந்தி நடிப்பார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். இந்தப் படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் கார்த்தில் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் சர்தார் 2 மற்றும் மார்ஷல் ஆகியப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்தப் படங்களின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த 2026-ம் ஆண்டின் இறுதியில் படங்களின் பணிகள் நிறைவடைந்து படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




நடிகர் கார்த்திக்கு மார்ஷல் படக்குழு வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து:
இந்த நிலையில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் மார்ஷல் படத்தின் படக்குழு நடிகர் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளது. இயக்குநர் தமிழ் எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வரும் நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரித்து வருகின்றது. இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் துருவ நட்சத்திரம் படம்
மார்ஷல் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
To the man who breathes life into every role with unmatched passion — Happy Birthday @Karthi_Offl sir! ✨ Team #MARSHAL is proud to be part of your incredible journey! @kalyanipriyan @directortamil77 @SaiAbhyankkar @sathyaDP #ArunVenjaramoodu @philoedit @prabhu_sr #Sathyaraj… pic.twitter.com/OTLIFD4hyI
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 25, 2026