புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் துருவ நட்சத்திரம் படம்
Dhruva Natchathiram movie faces new legal hurdles | நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் சிக்கலில் உள்ள படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தின் சிக்கல்கள் அனைத்தும் சரியாக வெளியாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சிக்கலில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் மாதன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மின்னலே. இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார். அறிமுகமான முதல் படமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இவர் மக்களிடையே நன்கு பிரபலமானார். இந்த நிலையில் இவரது இயக்கத்தில் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு என வரிசையாக பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியானது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
இயக்குநராக பிசியாக இருந்து வந்த கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும் பலப் படங்களில் நடித்துள்ளார். அதன்படி கடந்த 1997-ம் ஆண்டு இந்தி சினிமாவில் சின்ன வேடத்தில் நடித்த இவர் அவர் இயக்கும் படங்கள் மற்றும் வேறு இயக்குநர்கள் இயக்கும் படங்கள் என தொடர்ந்து பலப் படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் கடந்த 10 ஆண்டுகளாக இவர் இயக்கி தயாரித்தப் படம் திரையரங்குகளில் வெளியாகாமல் தொடர்ந்து சிக்கல்களை சந்தித்து வருகின்றது.




புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் துருவ நட்சத்திரம் படம்:
விக்ரம் நடித்துள்ள இந்த அதிரடித் திரைப்படமான துருவ நட்சத்திரம், ஜூன் 15-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக வெளியாவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததன் மூலம், அனைத்து சட்டச் சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுவிட்டதாகத் தோன்றிய நிலையில், நிலைமை மீண்டும் பழைய இடத்திற்கே திரும்பியுள்ளது.
இப்படத்தின் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனனின் கடனளித்தோர், நீதிமன்றம் பிறப்பித்த முந்தைய உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். மேலும் அந்தத் தீர்ப்பிற்கு எதிராக ஒரு மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பின்னரே படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த இறுதி முடிவு எடுக்கப்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பேட்ரியாட் படம் – எங்கு எபோது பார்க்கலாம் தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#DhruvaNatchathiram faces new legal hurdles!
Just when it seemed the @chiyaan action entertainer had cleared all legal issues after Madras High Court gave a green signal for its release on or before June 15, it is back to square one!
The creditors of its director… pic.twitter.com/wxjzhm8lfP
— Sreedhar Pillai (@sri50) May 22, 2026
Also Read… போடடுடா தம்பி பிரேக்-அ.. கைபுள்ளையை ரீகிரியேட் செய்த மாகாபா – வைரலாகும் வீடியோ!