AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அல்லு அர்ஜுன் படம் குறித்து இப்போது பேச முடியாது… ஆனால் – இயக்குநர் பேசில் ஜோசஃப் சொன்ன விசயம்

Basil Joseph Recent Interview: மலையாள சினிமாவில் இயக்குநர், நாயகன் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் பேசில் ஜோசஃப். இவர் அடுத்ததாக அல்லு அர்ஜுன் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது குறித்து பேசில் ஜோசஃப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜுன் படம் குறித்து இப்போது பேச முடியாது… ஆனால் – இயக்குநர் பேசில் ஜோசஃப் சொன்ன விசயம்
பேசில் ஜோசஃப்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 16:42 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம்  வந்தாலும் பான் இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் உள்ள இயக்குநர்கள் உடன் கூட்டணி வைத்து நடித்து வந்த இவர் தற்போது தமிழ் சினிமாவில் உள் இயக்குநர்கள் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி தற்போது இயக்குநர் அட்லி குமார் இயக்கத்தில் ராக்கா என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அல்லு அர்ஜுன்.

இந்த ராக்கா படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவ்வபோது அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இந்தப் படத்தினை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அது குறித்த தகவல்களும் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜுன் படம் குறித்து இப்போது பேச முடியாது:

இந்த நிலையில் இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு நடிகரும் இயக்குநருமான பேசில் ஜோசஃப் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக முன்பு தகவல்கள் வெளியானது. மேலும் அந்தப் படம் தொடர்பான தகவல்களும் இணையத்தில் கசிந்து வந்தது. இந்த நிலையில் நடிகர் பேசில் ஜோசஃப் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் அல்லு அர்ஜுன் படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் இது ஒரு நீண்ட செயல்முறை; குறிப்பாக, அல்லு அர்ஜுன் சம்பந்தப்பட்ட ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை இது இன்னும் அதிகம். இத்தகைய திட்டங்களுக்குப் போதுமான நேரமும், விரிவான திட்டமிடலும் தேவைப்படுகின்றன. சரியான தருணத்தில் இந்தப் படம் நிச்சயம் உருவாகும்; ஆனால், தற்போதைக்கு இது குறித்த கூடுதல் விவரங்களை என்னால் வெளியிட இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Jyothika: கருப்பு பட கடைசி 10 நிமிடம்.. சூர்யா கொளுத்திட்டாரு – பெருமையாக பேசிய ஜோதிகா!

இணையத்தில் வைரலாகும் பேசில் ஜோசஃப் பேச்சு:

Also Read… கேரளாவில் பரிமளா & கோ படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Follow Us