கேரளாவில் பரிமளா & கோ படத்தின் விநியோக உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்
distribution rights for the film Parimala & Co: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அவரது இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் பர்மளா அண்ட் கோ. இந்தப் படத்தின் கேரளா விநியோக உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் பசங்க என்ற படத்தை எழுதி இயக்கியதன் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் பாண்டிராஜ். இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான நம்ம வீட்டு பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் தலைவன் தலைவி ஆகியப் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
மேலும் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் இறுதியாக வெளியான தலைவன் தலைவி படம் ரூபாய் 100 கோடிக்கு அதிகமாக வசூலித்து வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஒரு நட்சத்திர பட்டாளத்தையே வைத்து பாண்டிராஜ் படம் இயக்கி உள்ளார். அதுதான் பரிமளா & கோ.




கேரளாவில் பரிமளா & கோ படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்:
அதன்படி நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்தப் பரிமளா & கோ படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிஷ்கின், யோகி பாபு, சாண்டி, சந்தோஷ் சோபன் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 08-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் தென்னிந்திய மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சினிமாஸ் பெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகு ரிலீஸ் அப்டேட்!
பரிமளா & கோ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Delighted to have @GokulamMovies as the Kerala distribution partner for #ParimalaAndCo 🤩 #Jayaram #Urvasi @iamSandy_Off @DirectorMysskin @isanjkayy @Ananthika108 @santoshsoban @iYogiBabu @LycaProductions @gkmtamilkumaran @pandiraaj_dir @pasangaprodns @george_dop @pradeepERagav… pic.twitter.com/G4AXyMCk11
— Lyca Productions (@LycaProductions) May 21, 2026
Also Read… ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு என்ன ஆனது? த்ரிஷ்யம் 3 படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ