Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!

Director Pandiraj: தமிழ் சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர் பாண்டிராஜ். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தான் படங்களை இயக்காத போது ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியது வைரலாகி வருகின்றது.

இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பாண்டிராஜ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 30 Jul 2025 18:50 PM

கோலிவுட் சினிமாவில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் பசங்க. இந்தப் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் (Director Pandiraj) இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் பாண்டிராஜ் எடுத்த இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவில் நடிகர் அருள் நிதியை வைத்து வம்சம், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து மெரினா, விமல் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, நடிகர் சிம்புவை வைத்து இது நம்ம ஆளு, நடிகர் விஷாலை வைத்து கதகளி, நடிகர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து நம்ம வீட்டுப் பிள்ளை, நடிகர் சூர்யாவை வைத்து எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இந்த வரிசையில் வெளியான பலப் படங்கள் ஹிட் அடித்தாலும் சிலப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற தவறியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவரது இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யாமேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

கடந்த மூன்று ஆண்டுகளாக பண ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னையின் இருந்தேன்:

கடந்த 2022-ம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் படம் வெளியான பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக இயக்குநர் பாண்டிராஜ் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இந்த இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தனக்கு ஏற்பட்ட பிரச்னை குறித்து சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியுள்ளார்.

அதில், கடந்த 3 வருடங்கள் என் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. பண ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பிரச்னையில் இருந்தேன். விக்ரம், ஜெயிலர் மற்றும் லியோ போன்ற படங்கள் வெற்றி பெற்றபோது, இனி ஃபேமிலி செண்டிமெண்ட் சினிமாவில் வேலை செய்யாது என்பதால் நான் சினிமாவை விட்டு வெளியேறலாம் என்று பலர் என் காதுபடவே சொன்னார்கள் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது மாமன் படக்குழு… எப்போது தெரியுமா?

தலைவன் தலைவி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… தளபதி விஜய் இல்லாமல் எல்சியு முழுமையடையாது… ஆனால் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!