தனுஷ் எனக்கு சீனியர் தான்… ஆனா இரண்டு பேரும் இணைந்து சினிமாவில் வெற்றிப் பெற்றோம் – ஜி.வி. பிரகாஷ் குமார்
GV Prakash Kumar: தற்போது தனுஷ் இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் இட்லி கடை. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவில் தானும் தனுஷும் இணைந்து பணியாற்றி வெற்றிப்பெற்ற அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் 2006-ம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் எழுதி இயக்கிய படம் வெயில். நடிகர் பரத் நாயகனாக நடித்த இந்தப் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் ஜிவி பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன முதல் படத்தின் பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். பல படங்கள் வெற்றியடையவில்லை என்றாலும் இவரது பாடல்கள் மட்டும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிகழ்வுகளும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணி எப்படி வெற்றிக் கூட்டணியோ அதே போல தனுஷ் – ஜிவி பிரகாஷ் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பொல்லாதவன் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து இருந்தார். இதுதான் இவர்கள் இணைந்து பணியாற்றிய முதல் படம் ஆகும். இதனைத் தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி, கேப்டன் மில்லர் என இவர்கள் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




நானும் தனுஷும் ஒன்னா சினிமாவில் வெற்றியடைந்தோம்:
இந்த நிலையில் தற்போது தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்திற்கும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து உள்ளார். இவரது இசையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இட்லி கடை படத்தில் இருந்து வெளியான பாடல் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தற்போது அளித்தப் பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷ் குமார் தனுக்கும் தனுஷிற்கும் இடையே இருக்கும் நட்பு குறித்து பேசியுள்ளார். மேலும் சினிமா வேலை என்பதை தாண்டி நாங்கள் இருவரும் இணைந்து ஒரே நேரத்தில் வெற்றிகளை சந்தித்து வந்தோம் என்றும் ஜிவி பிரகாஷ் குமார் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… வெற்றிகரமாக திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்த பறந்து போ படம் – வைரலாகும் பதிவு
இட்லி கடை படத்தின் பாடல் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
6 million views … making a blockbuster hit song thank u all … thanks @dhanushkraja sir pic.twitter.com/c7qFhystYA
— G.V.Prakash Kumar (@gvprakash) July 28, 2025
Also Read… கல்யாணி பிரியதர்ஷன் – நஸ்லேன் நடிப்பில் வெளியானது லோகா படத்தின் டீசர்!