ஹிமாச்சல் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு அரிதான சம்பவம், மருத்துவ உலகில் கவனம் பெற்றுள்ளது. ஷிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மருத்துவர்கள், 55 வயது நபரின் உயிரைக் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். அந்த நபரின் மூச்சுக்குழாய் அருகே உயிருடன் இருந்த ஒரு அட்டையை பூச்சியை பாதுகாப்பாக அகற்றியுள்ளனர். மருத்துவமனைக்கு வந்த அந்த நபர், தனக்கு கடந்த சில நாட்களாக தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போல உணர்வு இருந்ததாகவும், குரலில் மாற்றம் ஏற்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.