பெங்களூரில் நடந்த ஒரு ஹிட்அண்ட் ரன் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர், ஒரு தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனரின் சகோதரி ஆவார். சம்பவத்துக்குப் பிறகு போலீசார் எடுத்த நடவடிக்கை குறித்து அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓவர்லேயின் நிறுவனர் ஸ்னெஹில் சலுஜா, எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவரது சகோதரி மற்றும் அவரது நண்பர் காரில் சென்று கொண்டிருந்த போது, ரெட் சிக்னலில் நின்ற நிலையில் ஒரு மினி-டிரக் பின்னால் இருந்து மோதியதாக தெரிவித்துள்ளார். அந்த வண்டியின் ஓட்டுநர் மது அருந்திய நிலையில் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.