இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரத்திலும் பங்குச் சந்தையிலும் பெரும் நேர்மறை மாற்றங்கள் காணப்படுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் சுங்கவரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதித் துறைக்கு பெரிய ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட உடனேயே, இந்திய பங்குச் சந்தைகள் அதிரடி உயர்வைக் கண்டன.