துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக வெளியான லக்கி பாஸ்கர் படத்தை தியேட்டரில் மிஸ் பண்ணிடீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் கண்டிப்பா பாருங்க
Lucky Baskhar Movie: பான் இந்திய சூப்பர் ஹிட் ஹீரோ நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்கள் இன்று அவரது பிறந்த நாளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் மிஸ் பண்ணாமல் பாருங்கள்.

மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து சூப்பர் ஹிட படங்களில் நடித்து வருகிறார் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan). இவரது நடிப்பில் எந்த மொழியில் படம் வெளியானாலும் அது பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடிகர் துல்கர் சல்மான் தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்ற நிலையில் அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த லக்கி பாஸ்கர் படம் குறித்து தற்போது பார்க்கலாம். இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்காமல் தவறவிட்டவர்கள் நிச்சயமாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளதை பார்க்க தவறவிடாதீர்கள். தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக இருக்கும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தான் இந்த லக்கி பாஸ்கர் படம் வெளியானது.
கடந்த அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2024-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடிகர்கள் மீனாட்சி சவுத்ரி, ராம்கி, டின்னு, ரகு பாபு, ஆனந்த், பி. சாய் குமார், சர்வதமன் டி. பானர்ஜி, சச்சின் கெடேகர் மற்றும் ஒய். காசி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




துல்கர் சல்மானின் பிறந்த நாளில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய லக்கி பாஸ்கர் படம்:
துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியான இந்த லக்கி பாஸ்கர் படம் 1990-களில் நடப்பது போன்று காட்சியமைக்கப்பட்டு இருந்தது. அழகான மனைவி அன்பான மகன் மற்றும் அப்பா, தம்பி, தங்கை என்று கூட்டுக் குடும்பமாக அனைவரையும் தனது உழைப்பில் பார்த்துக்கொள்ளும் நபராக நடிகர் துல்கர் சல்மான் நடித்து இருந்தார்.
இவர் வங்கியில் கேசியராக பணிபுரிந்து வருகிறார். அங்கு பியூனாக பணிபுரியும் ராஜ்குமார் காசி ரெட்டிதான் நடிகர் துல்கரின் நெறுங்கிய நண்பர். சிறுவயதில் இருந்தே இவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். வங்கியில் கேசியராக இருக்கும் துல்கர் சல்மான் பதவி உயர்விற்காக கடுமையாக உழைக்கிறார்.
ஆனால் அதே வங்கியில் இருக்கும் மேலதிரியாரியின் சூழ்ச்சியால் அந்த பதவி உயர்வு துல்கர் சல்மானுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் மனம் உடைந்த துல்கர் சல்மான் நேர்மையாக இருந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது என்று வங்கியில் உள்ள பணத்தை கைமாற்றிவிட்டு அதிலிருந்து அதிக லாபத்தை சம்பாதிக்கிறார்.
Also Read… படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் – லோகேஷ் கனகராஜ்!
இப்படி தொடர்ந்து ஈடுபட்டு வரும் நடிகர் துல்கர் சல்மான் இறுதியாக வருமான வரித்துறை அதிகாரிகளின் பிடியில் சிக்குகிறார். அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்தார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் காப்பாற்றினாரா என்பதே படத்தின் கதை.
விறுவிறுப்பாக செல்லும் இந்தப் படம் திரையரங்குகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது மட்டும் இன்றி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி சாதனைகளைப் படத்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி அதிக நாட்களாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ட்ரெண்டிங்கில் இருந்த முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
லக்கி பாஸ்கர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Over 50+ premiere shows across Hyderabad for #LuckyBaskhar are moving from fast-filling to fulls! 🔥 More screens are being added! 💵
𝐏𝐑𝐄𝐌𝐈𝐄𝐑𝐄𝐒 from TODAY, 𝐆𝐑𝐀𝐍𝐃 𝐑𝐄𝐋𝐄𝐀𝐒𝐄 𝐓𝐎𝐌𝐎𝐑𝐑𝐎𝐖 🤩
Grab your tickets now 🎟 ~ https://t.co/9s04hm4tDf
This DIWALI,… pic.twitter.com/G3aBPzoqje
— Naga Vamsi (@vamsi84) October 30, 2024
Also Read… காதல் பட முருகனை நேரில் சந்தித்தால்…. இயக்குநர் பாலாஜி சக்திவேல் சொன்ன விசயம்