தனுஷ் 55 படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
Actor Mammootty Joined Dhanush Movie: தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கிறது தனுஷ் 55 படம். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் இன்று நடிகர் மம்முட்டி இணைந்தது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டுமே அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது. மேலும் அந்தப் படங்களில் வெளியீட்டிற்கு பிறகு நடிகர் தனுஷ் எந்தெந்த இயக்குநர்களின் இயக்கத்தில் நடிப்பார் என்ற தவகல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி நடிகர் தனுஷின் 54-வது படமான கர படத்தினை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதி இயக்கி இருந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி நடிகர் தனுஷின் 55-வது படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த அறிவிப்பு வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தநிலையில் முன்னதாக படத்திற்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடிகைகள் ஸ்ரீ லீலா மற்றும் சாய் பல்லவி இருவரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து படத்தில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி இணைய உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது.




தனுஷ் 55 படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி:
இந்த நிலையில் நேற்று தனுஷ் 55 படத்தின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக ஒரு எக்ஸ் தள பதிவு வெளியானது. அதில் இன்று 04-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு மதியம் 12 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று அறிவித்து இருந்தது. அதன்படி இன்று 12 மணிக்கு படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் மம்முட்டி படத்தில் இணைந்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தற்போது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனுஷ் 55 படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்க உள்ளது குறித்து வீடியோ வைரலாகி வருகின்றது.
Also Read… சிலம்பரசன் பிறந்த நாளில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கொடுத்த அப்டேட் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தனுஷ் 55 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When the Big M chooses a story, it becomes history 🔥
Super excited to welcome Megastar @mammukka onboard #D55!
We are honoured! Thank you #Mammootty sir.@dhanushkraja @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905… pic.twitter.com/f21kdflsbR
— Wunderbar Films (@wunderbarfilms) February 4, 2026
Also Read… கர முதல் D57 வரை.. தனுஷின் புது படங்களின் இசையமைப்பாளர்கள் யார் யார் தெரியுமா?