Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Pallavi: தனுஷின் டி55 படத்தின் இணைந்த சாய் பல்லவி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

D55 Movie New Update: நடிகர் தனுஷின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படம்தான் டி55. இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள நிலையில், இதில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா ஏற்கனவே இணைந்த நிலையில், தற்போது அடுத்த நாயகி குறித்து படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Sai Pallavi: தனுஷின் டி55 படத்தின் இணைந்த சாய் பல்லவி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சாய் பல்லவி மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Feb 2026 17:11 PM IST

கடந்த 2024ம் ஆண்டில் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) அமரன் (Amaran) திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக மக்களிடையே பிரபலமானவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy). இந்த படமானது மறைந்த முன்னாள் ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி (Sai Pallvi) இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தை அடுத்ததாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷின் (Dhanush) டி55 (D55) படத்தை இயக்கவுள்ளதாக கடந்த 2025ம் ஆண்டிலே அறிவித்திருந்தார். இந்நிலையில் தனுஷ் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருந்த நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போனது. முதலில் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ஜெட் காரணமாக அந்த தயாரிப்பு நிறுவனம் விலகிவிட்டது. தற்போது இப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்.டேக் ஸ்டூடியோஸ் என இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே மாரி 2 படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது இந்த காம்போ மீண்டும் இணைந்துள்ளது. இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ்.. சிலம்பரசன் பர்த்டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்!

தனுஷின் டி55 படத்தில் இணைந்த இரண்டாவது கதநாயகி அறிவிப்பு எக்ஸ் பதிவு:

தனுஷின் இந்த படத்தில் தற்போது ஸ்ரீ லீலாவை தொடர்ந்து, நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளார். எனவே இப்படத்தில் இரு கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் மற்றும் சாய் பல்லவியின் காம்போ மாரி 2 படத்தின் மூலம் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது 2வது முறையாக மீண்டும் இணைந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

தனுஷின் டி55 படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் :

இந்த டி55 படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் நிலையில், முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது. இந்த படமானது ஒரு ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.

இதையும் படிங்க: நாளை சிம்புவின் பிறந்த நாளில் வெளியாகும் அரசன் பட அப்டேட் – வைரலாகும் தகவல்

இவர் ஏற்கனவே தமிழில் மிக பிரம்மாண்ட நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவரும் நிலையில், தனுஷின் டி55 படத்திற்கும் இவரே இசையமைக்கிறார். இந்த படமானது வரும் 2027ம் ஆண்டில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 மார்ச் மாதம் முதல் படக்குழு தொடங்கவுள்ளதாம். இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. தனுஷின் 55வது படமாக உருவாகவுள்ள இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.