AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Manmadhan: ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ்.. சிலம்பரசன் பர்த்டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்!

Silambarsans Manmadhan Re-release: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன். இவர் வரும் 2026 பிப்ரவரி 3ம் தேதியில் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு அவரின் மன்மதன் படமானது திரையரங்குகளில் ரீ -ரிலீஸ் செய்யப்படுகிறது.

Manmadhan: ரசிகர்ளுக்கு சர்ப்ரைஸ்.. சிலம்பரசன் பர்த்டே ஸ்பெஷலாக ரீ-ரிலீஸாகும் ‘மன்மதன்’ திரைப்படம்!
மன்மதன் திரைப்படம்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Feb 2026 16:00 PM IST

தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிலம்பரசன் (Silmbarasan). இவர் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இயக்குநர் தற்போது தயாரிப்பாளராகவும் புது அவதாரம் எடுத்துள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியானது. இந்த படத்தில் மணி ரத்னம் (Mani Ratnam) இயக்க, கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து நடித்திருந்தார். இப்படம் ரிலீஸின்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ஏமாற்றத்தை கொடுத்து தோல்வியை தழுவியது. இந்த படத்தை அடுத்ததாக அரசன் (Arasan), STR50, 51 என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமானார். தற்போது இவர் வெற்றிமாறனின் இயக்கத்தில் அரசன் படத்தில் பிசியாக இருந்துவருகிறார். இந்நிலையில் வரும் 2026 பிப்ரவரி 3ம் தேதியில் சிலம்பரசன் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் அவரின் பர்த்டே ஸ்பெஷலாக ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் இருக்கிறது. அது என்னவென்றால், சிலம்பரசன் மற்றும் ஜோதிகா (jyothika) இணைந்து நடித்திருந்த மன்மதன்  (Manmadhan) படமானது வரும் 2026 பிப்ரவரி 3ம் தேதியில் ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: நாளை சிம்புவின் பிறந்த நாளில் வெளியாகும் அரசன் பட அப்டேட் – வைரலாகும் தகவல்

மன்மதன் பட ரீ-ரிலீஸ் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு :

இந்த மன்மதன் திரைப்படத்தில் சிலம்பரசன், ஜோதிகா, சிந்து, கவுண்டமணி மற்றும் சந்தானம் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குநர் ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்த நிலையில், அவருடன் நடிகர் சிலம்பரசனும் இப்படத்தை இணைந்து இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தின் கதையையும் சிலம்பரசன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் சிலம்பரசன் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்

காதல், காமெடி மற்றும் எமோஷனல் என முற்றிலும் மாறுபட்ட பொழுதுபோக்கு திரைப்படமாகவே அமைந்திருந்தது. இப்படமானது ரசிகர்கள் மத்தியில் தற்போதுவரையிலும் பேசப்பட்டுவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட். இந்நிலையில் இப்படமானது வெளியாகி கிட்டத்தட்ட 23 வருடங்களை கடந்த நிலையில், இந்த 2026 பிப்ரவரி 3ம் தேதியில் சிலம்பரசனின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ- ரிலீஸ் செய்யப்படுகிறது. இப்படமும் ரீ-ரிலீஸில் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us