Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்

Jailer 2 Movie Shooting Update: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது போர்ஷனை நடித்து முடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த நடிகர் ரஜினிகாந்த் – வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Feb 2026 11:48 AM IST

உலக அளவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான கூலி படமும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து கூலி படத்தில் நடித்து முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் உடனே இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் கலந்துகொண்டார். அதன்படி ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த அறிமுக வீடியோவில் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்று இருந்த நிலையில் அதனைப் பார்த்த நெட்டிசன்கள் அதில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவில்லை டூப் என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் அந்த புரோமோ வீடியோவின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டு அந்த அதிரடியான காட்சிகளில் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்தார் என்பதை விளக்கினர். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோவும் ரசிகர்களிடையே வைரலானது. மேலும் கூலி படத்தின் வெளியீட்டிற்கு பிறகு முழுவதுமாக ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்புகளில் தீவிரமாக ஈடுபட்டார் நடிகர் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2 படத்தில் தனது போர்ஷனை நடித்து முடித்த ரஜினிகாந்த்:

ஜெயிலர் 2 திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பை/சண்டிகரில் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இந்தியாவின் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் படப்பிடிப்பில் இணையவுள்ளார் என்றும் அவரது தேதிகளுக்காக படக்குழு காத்திருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்தின் விளம்பரப் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் பிப்ரவரி 7 மற்றும் பிப்ரவரி 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என்றும் அதனை இயக்குநர் நெல்சன் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Also Read… வித் லவ் படத்தை பார்த்துவிட்டு நடிகர் மணிகண்டன் சொன்ன விமர்சனம்

இணையத்தில் கவனம்பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டீசருக்கு பேராதரவு கொடுத்த மாண்புமிகு மக்களுக்கு நன்றி – கராத்தே பாபு படக்குழு