தூசி தட்டப்படும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்… ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்
Director Venkat Prabhus Party Movie: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி வெளியாகாமல் கிடப்பில் இருந்த பார்ட்டி படத்தை வெளியிட தற்போது திட்டமிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக புதிதாக உருவாகும் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மட்டும் இன்றி பல ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் தடைப்பட்ட படங்களை தொடர்ந்து தூசித் தட்டி திரையரங்குகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த மத கஜ ராஜா படத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த தமிழ் திரையுலகினர் கிடப்பில் இருக்கும் மற்றப் படங்களை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சிலப் படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




தூசி தட்டப்படும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்:
இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உருவான படம் பார்ட்டி. காமெடி ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெய், ஷாம், சிவன், சத்யராஜ், ஜெயராம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சுரேஷ் என பலர் நடித்து உள்ளனர். இந்தப் படம் பல ஆண்டுகளாக திரையரங்குகளில் வெளியாகாமல் கிடப்பில் இருந்த நிலையில் தற்போது படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி படம் வருகின்ற பிப்ரவரி மாதம் அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… Varanasi: மகேஷ் பாபு – ராஜமௌலியின் வாரணாசி பட ரிலீஸ் எப்போது? இணையத்தில் வைரலாகும் தகவல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
It has been six or seven years since the film #Party, directed by #VenkatPrabhu, was made. The makers are planning to release the movie in February or March. pic.twitter.com/lSPSp1ge2U
— Movie Tamil (@_MovieTamil) January 31, 2026
Also Read… ஏய் சண்டக்காரா… 10 வருடங்களைக் கடந்தது இறுதிச்சுற்று படம்!