AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அன்பறிவு இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்

Kamal Haasan’s 237th Movie Shooting Update Viral On Social Media: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உலகம் முழுவதும் ரசிகர்களால் உலக நாயகன் என்று கொண்டாடப்படும் கமல் ஹாசனின் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதைப் பார்க்கலாம்.

அன்பறிவு இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
அன்பறிவு மற்றும் கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 18 Mar 2026 14:44 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல் ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவக உள்ள படங்களின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் தமிழ் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த ஒரு மகிழ்ச்சியான சம்பவமும் சமீபத்தில் நடைப்பெற்றது. அதன்படி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் இருவரும் இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தப் படத்திற்கு முன்னதாக நடிகர் கமல் ஹாசன் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவு இயக்கும் படத்த்டில் நாயகனாக நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பாணியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

அன்பறிவு இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது?

கமல்ஹாசனின் 237-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது. இத்திட்டம், செயற்கை நுண்ணறிவு (AI) பின்னணியைக் கொண்ட ஒரு அறிவியல் புனைகதைத் திரைப்படம் என்று கூறப்படுகிறது. படக்குழுவின் தகவலின்படி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இதன் பணிகள் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… லவ் டுடே படம் கொடுத்த அதே வைப் ஹேப்பி ராஜ் படம் கொடுத்தது – நடிகர் கவின்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஒவ்வொரு ரகசியத்தையும் ஒருத்தர் பாதுகாக்கிறார்… வெளியானது டிமாண்டி காலனி 3 படத்தின் ப்ரோமோ வீடியோ

Follow Us