AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

லவ் டுடே படம் கொடுத்த அதே வைப் ஹேப்பி ராஜ் படம் கொடுத்தது – நடிகர் கவின்

Kavin Speech About Happy Raj Movie Title Teaser: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவர் சமீபத்தில் ஹேப்பி ராஜ் படத்தின் விழாவில் கலந்துகொண்டு பேசியது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லவ் டுடே படம் கொடுத்த அதே வைப் ஹேப்பி ராஜ் படம் கொடுத்தது – நடிகர் கவின்
நடிகர் கவின்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Mar 2026 17:09 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் கவின். இவர் சின்னத்திரையில் இருக்கும் போதே தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து சினிமாவில் இவர் நாயகனாக அறிமுகம் ஆன ஆரம்ப காலக்கட்டத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் வெற்றியடையவில்லை. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் கலந்துகொண்ட பிறகு இவரது ரசிகர்கள் வட்டாரம் பெரிதாகியது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் கவின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிகர் கவின் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஹாய். இந்தப் படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை  நயன்தாரா நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

லவ் டுடே படம் கொடுத்த அதே வைப் ஹேப்பி ராஜ் படம் கொடுத்தது:

இந்த நிலையில் நடிகர் கவின் சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி உள்ள ஹேப்பி ராஜ் படத்தின் பட விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, லவ் டுடே படத்தின் டிரெய்லரைப் பார்த்தபோது, ​​எனக்கு ஒரு பயங்கரமான உணர்வு ஏற்பட்டது. ஹேப்பி ராஜ் படத்தின் அறிவிப்பு டீஸரும் எனக்கு அதே போன்றதொரு உணர்வையே அளித்தது. அதன் பிறகுதான், இப்படத்தின் இயக்குனர் பிரதீப் அண்ணாவின் உதவியாளர் என்பது எனக்குத் தெரியவந்தது. ஜி.வி. பிரகாஷின் துடிப்பான ஆற்றலும், அவரது தனித்துவமான பாணியும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன எனவும் கவின் அந்த விழாவில் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஆஸ்கர் 2026: விருதுகளை வென்றவர்கள் யார் யார்? லிஸ்ட் இதோ

இணையத்தில் வைரலாகும் கவின் பேச்சு:

Also Read… நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? வைரலாகும் தகவல்

Follow Us