AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

துருவ் விக்ரமை நாங்க தான் தூக்கி வளர்த்தோம்… நினைவுகளை பகிர்ந்த சசிகுமார்!

Sasikumar talks about Dhruv Vikrams childhood memory: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக வலம் வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துகொண்ட போது சசிகுமார் இவரது குழந்தை பருவத்தைப் பற்றி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

துருவ் விக்ரமை நாங்க தான் தூக்கி வளர்த்தோம்… நினைவுகளை பகிர்ந்த சசிகுமார்!
துருவ் விக்ரம் மற்றும் சசிகுமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 15 Mar 2026 18:00 PM IST

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆகி தற்போது தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் நடிகர் துருவ் விக்ரம். இவரது தந்தை சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நிலையில் துருவ் விக்ரம் தற்போது வளர்ந்து வரும் நாயகனாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் ஆகும். இந்தப் படத்தை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார் நடிகர் துருவ் விக்ரம். இந்தப் படத்தில் துருவ் விக்ரமின் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தாலும் அந்தப் படத்தில் அவரின் தந்தை சியான் விக்ரம் தான் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தனது திறமையை நிரூபிக்க காத்திருந்த நடிகர் துருவ் விக்ரமிற்கு ஜாக்பாட் போல அமைந்ததுதான் பைசன் படம். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. கபடி விளையாட்டை மையமாக வைத்து உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பை மக்கள் கொண்டாடித்தீர்த்தனர். இந்தப் படத்திற்காக தொடர்ந்து துருவ் விக்ரமிற்கு பல விருதுகள் குவிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

துருவ் விக்ரமை நாங்க தான் தூக்கி வளர்த்தோம்:

இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகர் துருவ் விக்ரமிற்கு பைசன் படத்திற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை துருவ் விக்ரமிற்கு சசிகுமார் வழங்கினார். அதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் குறித்து சசிக்குமார் கூறியதாவது, விக்ரம் எனக்கு அமீர் எல்லாருக்கும் மிகவும் நெறுக்கம். நாங்க தான் துருவை தூக்கி வளர்த்தோம். நாங்க தூக்கி வளர்த்த பையன் இப்போ இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பது மிகவும் சந்தோசமாக உள்ளது என்று பல நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Nooru Saami: விஜய் ஆண்டனியின் நூறு சாமி.. ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் சசிகுமாரின் பேச்சு:

Also Read… கெணத்த காணோம் படத்திலிருந்து வெளியானது ஸ்னீக் பீக் வீடியோ

Follow Us