AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சில பயணங்களுக்குக் கால தாமதமாகும்… ஆனால் சேருமிடம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் – ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Once More Movie Release Update Out Now: நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் நடிப்பில் முன்னதாகவே உருவாகி திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில பயணங்களுக்குக் கால தாமதமாகும்… ஆனால் சேருமிடம் எப்போதும் சிறப்பானதாக இருக்கும் – ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
ஒன்ஸ்மோர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 14 Mar 2026 12:45 PM IST

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது நாயகனாகவும் வில்லனாகவும் மாறிமாறி கலக்கி வருகிறார் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் எந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்தாலும் ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு நல்ல வரவேற்பைப் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியது. இந்தப் படத்தில் நடிகை அதிதி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து வெளியான அடுத்தடுத்த அப்டேட்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாகவே நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்கள் எதுவும் வெளியாகாமலே இருந்தது.

மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகி வரும் மற்றப் படங்களின் வெளியீடு மற்றும் அது குறித்த அப்டேட்கள் மட்டுமே தொடர்ந்து வெளியாகி வந்தது. அதே நேரத்தில் இந்த ஒன்ஸ் மோர் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகளும் நடைப்பெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது ஒன்ஸ் மோர் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஒன்ஸ்மோர் படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு:

இந்த ஒன்ஸ் மோர் படத்தை இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர்கள் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் உடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக உள்ள மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் இந்தப் படத்தை தயாரித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் வெளியீடு குறித்த அப்டேட்டில் படம் வருகின்ற கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… ஓடிடியில் வெளியானது அனுபமா பரமேஸ்வரனின் லாக் டவுன் படம் – உற்சாகத்தில் ரசிகர்கள்

ஒன்ஸ்மோர் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… உலக அளவில் ரீ ரிலீஸாகும் ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் – எப்போது தெரியுமா?

Follow Us