சிறந்த வில்லனாக தேர்வான அர்ஜுன் தாஸ்… மகிழ்ச்சியில் வெளியிட்ட எக்ஸ் போஸ்ட்
Actor Arjun Das X Post: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நடிகர்கள் மிகக் குறைவு. அதுவும் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி பெண் ரசிகைகளை அதிகமாக கவந்த நடிகர்களில் ஒருவர் தான் அர்ஜுன் தாஸ்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பெருமான் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தினை இயக்குநர் ராஜேஷ் கண்ணன் ஜே எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான போது பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கத் தவறியது. அதனைத் தொடர்ந்து2017-ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் ஆக்ஜிசன் என்ற படத்தில் நடிகராக அறிமுகம் ஆனார். இதில் நாயகனாக நடிக்கவில்லை என்றாலும் அர்ஜுன் தாஸின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான கைதி படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருப்பார். நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று இருந்தாலும் அதிக அளவில் மக்களிடையே கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது நடிகர் அர்ஜுன் தாஸ் தான் என்று கூறினாலும் மிகையாகாது. அதன்படி இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் தனது கரகரத்த குரலில் லைஃப் டைம் செட்டில்மெண்ட் வசனம் பேசியபோது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் கலக்கிய பிறகு அவருக்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்திற்காக சமீபத்தில் தமிழக அரசு சிறந்த வில்லனுக்கான விருதை நடிகர் அர்ஜுன் தாஸிற்கு அறிவித்துள்ளது.




சிறந்த வில்லனாக தேர்வான அர்ஜுன் தாஸ்:
அதனைத் தொடர்ந்து அரசிற்கும் கைதி படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்து அர்ஜுன் தாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, கைதி திரைப்படம் எனக்கு எப்போதும் ஒரு மிகச் சிறப்பான படமாக இருந்து வருகிறது, இனியும் இருக்கும். ‘கைதி’ படத்திற்காக சிறந்த வில்லனுக்கான மாநில விருதை எனக்கு வழங்கிய தமிழக அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது உண்மையிலேயே ஒரு பெரிய கௌரவம். என் மீது நம்பிக்கை வைத்த லோகேஷ், கார்த்தி சார் மற்றும் எஸ்.ஆர். பிரபு சார் ஆகியோருக்கு நன்றி. உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் ரசிகர்களுக்கு நன்றி. விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! எனது பலத்தின் தூண்களான என் பெற்றோருக்கு – இந்த விருது உங்கள் இருவருக்கும் சமர்ப்பணம் என்று தெரிவித்து இருந்தார்.
நடிகர் அர்ஜுன் தாஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#ForeverGrateful ♥️@prabhu_sr @Karthi_Offl @Dir_Lokesh #TamilNaduStateFilmAwards pic.twitter.com/EtSBkIYpYo
— Arjun Das (@iam_arjundas) January 31, 2026
Also Read… 2016 முதல் 2022 வரை… சிறந்த தமிழ் படங்கள் எது? தமிழக அரசு விருதுகள் அறிவிப்பு