AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள்.. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் முதலிடம்!

Top 5 IPL Players who Played Most Teams: ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் ஏலம் விடப்பட்டு, அணிகள் தங்கள் அணியில் பல மாற்றங்களை செய்கின்றன. இந்தச் செயல்பாட்டில், பல வீரர்கள் ஐபிஎல்லில் தங்களது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக அணிகளுக்காக விளையாடிய 5 வீரர்கள்.. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் முதலிடம்!
ஐபிஎல்லில் அதிக அணிகளுக்காக விளையாடிய வீரர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Mar 2026 12:02 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசன் (IPL 2026) வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் பிரமாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru) , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகிறது. இந்தநிலையில், ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசன் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் ஏலம் விடப்பட்டு, அணிகள் தங்கள் அணியில் பல மாற்றங்களை செய்கின்றன. இந்தச் செயல்பாட்டில், பல வீரர்கள் ஐபிஎல்லில் தங்களது விளையாட்டு வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடி செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சில வீரர்கள் 5க்கும் மேற்பட்ட அணிகளுக்காக விளையாடியுள்ளனர். அந்த வீரர்கள் யார்? எந்தெந்த அணிகளுக்காக விளையாடியுள்ளனர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

ALSO READ: 2008 முதல் 2025 வரை.. ஐபிஎல் பட்டத்தை வென்ற அணிகளின் பட்டியல்!

ஆரோன் ஃபின்ச்:

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். ஆரோன் ஃபின்ச் ஐபிஎல்லில் 9 வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் இந்தியா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

ஜெய்தேவ் உனத்கட்:

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட்டும் இந்தப் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் ஜெய்தேவ் உனத்கட் எட்டு வெவ்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர்ஜெயன்ட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

மணீஷ் பாண்டே:

ஐபிஎல் வரலாற்றில் சதம் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேனான மணீஷ் பாண்டே, பல அணிகளுக்காக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார். மணீஷ் பாண்டே ஐபிஎல்லில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, புனே வாரியர்ஸ் இந்தியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்களுக்காக களமிறங்கியுள்ளார்.

தினேஷ் கார்த்திக்:

விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், தனது நீண்ட ஐபிஎல் வாழ்க்கையில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

ALSO READ: ஐபிஎல்லில் மிக மெதுவான சதம்.. முதலிடத்தில் விராட் கோலி..!

யுவராஜ் சிங்:

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் ஐபிஎல்லில் 6 வெவ்வேறு அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். தனது ஆக்ரோஷமான பேட்டிங் மற்றும் ஆல்-ரவுண்டர் செயல்திறன் காரணமாக, அவர் ஒவ்வொரு அணியிலும் முக்கிய வீரராக இருந்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ், புனே வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் போன்ற புகழ்பெற்ற அணிகளும் இதில் அடங்கும்.

Follow Us