AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் யார்? டாப் 5 லிஸ்ட் இதோ!

Most Dismissals by Wicketkeeper in IPL: ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை பற்றியே அதிகம் பேசினாலும், எம்.எஸ்.தோனி (MS Dhoni) போன்ற விக்கெட் கீப்பர்களின் பங்கும் மிக முக்கியமானது. விக்கெட் கீப்பர்கள் தங்களின் அற்புதமான கேட்சுகள் மற்றும் ஸ்டம்பிங்குகள் மூலம் ஒரு போட்டியின் போக்கையே மாற்றும் திறமையை கொண்டவர்கள்.

IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான விக்கெட் கீப்பர் யார்? டாப் 5 லிஸ்ட் இதோ!
ஐபிஎல் சிறந்த விக்கெட் கீப்பர்கள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Mar 2026 08:00 AM IST

ஐபிஎல் 2026 (IPL 2026) சீசனானது வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதியுடன் பிரமாண்டமாக தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடங்க இன்னும் சிறிது காலமே உள்ளே நிலையில், சில குறிப்பிட்டதக்க வீரர்களின் பங்களிப்புகளை பற்றி பேசுவது மிக மிக முக்கியம். ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை பற்றியே அதிகம் பேசினாலும், எம்.எஸ்.தோனி (MS Dhoni) போன்ற விக்கெட் கீப்பர்களின் பங்கும் மிக முக்கியமானது. விக்கெட் கீப்பர்கள் தங்களின் அற்புதமான கேட்சுகள் மற்றும் ஸ்டம்பிங்குகள் மூலம் ஒரு போட்டியின் போக்கையே மாற்றும் திறமையை கொண்டவர்கள். அந்தவகையில், ஐபிஎல் வரலாற்றில், சில விக்கெட் கீப்பர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ALSO READ: அவர் என் இடத்தில் இருந்தால் தான் தெரியும் – தோனியின் கருத்துக்கு கம்பீர் பதில்

முதலிடத்தில் தோனி:

ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பிங் மூலம் அதிக ஆட்டமிழப்புகளை செய்த வீரர்கள் பட்டியலில் எம்.எஸ். தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த 2008 முதல் 2025 வரை 278 போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ்.தோனி,  271 இன்னிங்ஸ்களில் 201 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில் 154 கேட்சுகளும் 47 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். இதன்மூலம், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். தனது மின்னல் வேக ஸ்டம்பிங்குகளால் பல பேட்ஸ்மேன்களை வெளியேற்றுவதில் திறமைமிக்கவர்.

இரண்டாம் இடத்தில் தினேஷ் கார்த்திக்:

ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பிங் மூலம் அதிக ஆட்டமிழப்புகளை செய்த வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை 257 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 174 பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இதில், 137 கேட்சுகளையும் 37 ஸ்டம்பிங்குகளும் அடங்கும். ஐபிஎல்லில் தினேஷ் கார்த்தில் டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல அணிகளுக்காக விளையாடியுள்ளார். தற்போது, தினேஷ் கார்த்திக் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

3வது இடத்தில் விருத்திமான் சஹா:

விருத்திமான் சாஹா 87 கேட்சுகள் மற்றும் 26 ஸ்டம்பிங்குகள் உட்பட 113 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்து, மூன்றாவது இடத்திலும், ரிஷப் பண்ட் 125 போட்டிகளில் 101 ஆட்டமிழப்புகளை 4வது இடத்திலும் உள்ளனர். இதில் 77 கேட்சுகளும் 24 ஸ்டம்பிங்குகளை ரிஷப் பண்ட் மேற்கொண்டுள்ளார்.

ராபின் உத்தப்பா 5 இடம்:

ஐபிஎல் வரலாற்றில் விக்கெட் கீப்பிங் மூலம் அதிக ஆட்டமிழப்புகளை செய்த வீரர்கள் பட்டியலில் ராபின் உத்தப்பா 4வது இடத்தில் உள்ளார்.  ஐபிஎல் தொடரில் ராபின் உத்தப்பா இதுவரை 58 கேட்சுகள் மற்றும் 32 ஸ்டம்பிங்குகள் உட்பட 90 பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

ALSO READ: ஐபிஎல் 2026ல் மிக இளம் மற்றும் வயதான வீரர்கள் யார்? இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம் என்ன?

ஐபிஎல் 2026 எப்போது தொடக்கம்..?

ரசிகர்கள் இப்போது வரவிருக்கும் சீசனை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 2026 ஐபிஎல் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்தப் புதிய சீசனிலும் விக்கெட் கீப்பர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us