AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: 2026 ஐபிஎல்லில் எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்..? முழு பட்டியல் இதோ!

IPL 2026 ALL Captains List: ஐபிஎல் 2026 தொடருக்கான கேப்டனை இன்னும் அறிவிக்காத ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகும். அஜிங்க்யா ரஹானே கேப்டனாகத் தொடர்வார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் மட்டுமல்ல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேப்டனும் ஆவார்.

IPL 2026: 2026 ஐபிஎல்லில் எந்தெந்த அணிகளுக்கு யார் யார் கேப்டன்..? முழு பட்டியல் இதோ!
ஐபிஎல்லில் அனைத்து அணியின் கேப்டன்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Mar 2026 17:39 PM IST

2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) கடந்த 2026 மார்ச் 8ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஐபிஎல் 2026 (IPL 2026) சீசன் வருகின்ற 2026 மார்ச் 28ம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதவுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுவரை 20 போட்டிகளுக்கான அட்டவணையை மட்டுமே வெளியிட்டுள்ளது. தேர்தல் தேதி வெளியான காரணத்தினால், விரைவில் ஐபிஎல் 2026 முழு அட்டவணையும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தைத் தொடர்ந்து, பல அணிகள் தங்கள் அணியில் பல மாற்றங்களைச் செய்துள்ளன. ஒரு அணி அதன் கேப்டனைக் கூட மாற்றியது. இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசன் தொடங்குவதற்கு முன்பு, எந்த அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம்.

ALSO READ: சிஎஸ்கே முதல் எல்எஸ்ஜி வரை.. ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளின் முழு விவரம்..!

அனைத்து அணிகளின் கேப்டன்:

  • சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) – ருதுராஜ் கெய்க்வாட்
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) – ரஜத் படிதார்
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) – பேட் கம்மின்ஸ்
  • பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – ஷ்ரேயாஸ் ஐயர்
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) – ரிஷப் பந்த்
  • மும்பை இந்தியன்ஸ் (MI) – ஹர்திக் பாண்டியா
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) – அக்சர் படேல்
  • குஜராத் டைட்டன்ஸ் (GT) – சுப்மன் கில்
  • ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) – ரியான் பராக்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) – இன்னும் இறுதி செய்யப்படவில்லை, ரஹானே தொடரலாம்.

ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் கேப்டன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 24 வயதான ரியான் பராக் கேப்டனாக இருப்பார் என அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஐபிஎல்லில் சில சீசன்களாக ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த சஞ்சு சாம்சன், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறிவிட்டார். இதன் காரணமாக, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதேநேரத்தில், மீதமுள்ள 8 அணிகள் தங்களது கேப்டன்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

ALSO READ: கோலி முதல் ரெய்னா வரை.. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்..!

கொல்கத்தா அணியின் கேப்டன் யார்..?

ஐபிஎல் 2026 தொடருக்கான கேப்டனை இன்னும் அறிவிக்காத ஒரே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகும். அஜிங்க்யா ரஹானே கேப்டனாகத் தொடர்வார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் மட்டுமல்ல, அதிக விலைக்கு வாங்கப்பட்ட கேப்டனும் ஆவார். இந்த முறை, அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை குறைந்தபட்சம் பிளேஆஃப்களுக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்வார்.

Follow Us